ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிருகா’

பணக்கார விதவை மற்றும் விவாகரத்தான வசதியான வீட்டு பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி, முடிந்தவரை பணத்தை கொள்ளையடிப்பவர் ஸ்ரீகாந்த். இதற்காக பல கொலைகளை செய்யும் கொடூர குணம் கொண்டவர். அவரை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றும் பெண், அவர் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்கிறார். அதாவது தனது சகோதரி ராய்லட்சுமிக்கும் இன்னொரு சகோதரிக்கும் சொத்துகளை எல்லாம் தனது தந்தை எழுதி வைத்து விட்டார் என்றும், ராய்லட்சுமியிடம் இருக்கும் மொத்த பணத்தையும் தனக்கு கொண்டுவந்து கொடுக்கும்படியும் நிபந்தனை விதிக்கிறார்.

ஊட்டியில் இருக்கும் ராய்லட்சுமியின் இடத்திற்கு செல்லும் ஸ்ரீகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரை திருமணமும் செய்துகொள்கிறார். ஒருகட்டத்தில் ராய் லட்சுமி ரகசிய அறையில் சேர்த்து வைத்திருக்கும் பணம் பற்றிய விபரத்தையும் தெரிந்துகொள்கிறார். எதிர்பாராமல் அவர் செய்த ஒரு தவறின் மூலம் போலீசுக்கும் ராய்லட்சுமிக்கும் அவர் யார் என்கிற உண்மை தெரிய வருகிறது. ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போய், ஸ்ரீகாந்த் உஷாராகி ராய்லட்சுமியை காட்டு பங்களாவில் சிறைவைகிறார். இதற்கிடையே எஸ்டேட் பகுதியில் உலாவரும் புலி ஒன்றை பிடிப்பதற்காக ஸ்ரீகாந்த் வைத்த கூண்டில் புலி சிக்குகிறது. பூட்டிய பங்களாவில் இருக்கும் லட்சுமிராய் உள்ளிட்டோர் மீது புலியை ஏவுகிறார் இறுதியில் மிருகத்தனமான குணம் கொண்ட ஸ்ரீகாந்த், நிஜமான புலி இருவரிடம் இருந்து ராய்லட்சுமி தப்பித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த்தை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. தனது அமைதியான நடிப்பின் மூலம் கொடூர வில்லத்தனத்தை வெளிப்படுத்த முயற்சித்திருக்கும் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, நைரா, வைஷ்ணவி சந்திரன், தவிதா என படத்தில் வரும் அனைத்து நடிகைகளுடனும் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார்.

பணக்கார விதவை வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் ராய் லட்சுமி, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் எம்.வி.பன்னீர் செல்வம், கோவா, ஊட்டி போன்ற அழகான பகுதிகளை கூடுதல் அழகோடு காட்சிப்படுத்தியிருப்பதோடு, புலி இடம்பெறும் காட்சிகளில் ரொம்ப அதிகமாகவே உழைத்திருக்கிறார். அருள்தேவின் பின்னணி இசையில் புலியின் உறுமலும், ஸ்ரீகாந்தின் கொடூரமும் பதற வைக்கிறது.

பாலாவின் உதவி இயக்குனர் ஜே பார்த்திபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெளிக்காட்டுவதற்காக, நிஜ மிருகத்தையும் கதாப்பாத்திரமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜே.பார்த்திபன்,

மொத்தத்தில் ‘மிருகா’மனித உருவத்தில் ஒரு மிருகம்

நடிகர்கள் ; ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி
இசை அருள் தேவ்
டைரக்சன் ; ஜே.பார்த்திபன்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.