அறிமுக இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் விஜு மற்றும் பல்லவி டோரா நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ‘மோசடி’.

நாயகன் கிருஷ்ணா ( விஜூ ) தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகிறார். மனிதர்களின் பேராசையை தூண்டி அவர்களை ஏமாற்றும் விஜூ 30 நாட்களில் 100 கோடி ரூபாய் பணத்தை சேர்ப்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். 100 கோடி ரூபாய் சேரும் நேரத்தில் போலீசில் நண்பர்களுடன் சிக்கிக் கொள்கிறார் விஜூ. எதற்காக இந்த மோசடியில் ஈடுபட்டார் என்பதை நாயகன் விளக்குகிறார். கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.

தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருக்கும் நாயகன் விஜு, அவரின் அனைத்து பண பரிவர்த்தனைகளும் விஜுவே பார்த்து வருகிறார். எதிர்பாராத ஒரு ஆபத்தில் இருந்தது நாயகி ராதாவை ( பல்லவி டோரா ) காப்பாற்றுகிறார். நாளடைவில் இது காதலாக மாறுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார் அமைச்சர்.

திடீரென ஒருநாள், மோடியின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வருகிறது. அமைச்சரின் பல கோடி பழைய நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்றிக் கொடுக்கிறார் விஜு.

அப்படி மாற்றப்படும் 100 கோடி பணத்தை விஜூ வசம் வைத்துக்கொள்ள சொல்கிறார் அமைச்சர். சிலகாலம் கழித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்.

ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது. எனவே 30 நாட்களில் அந்த 100 கோடியை திருப்பி தரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். இவை எல்லாம் தெரிய வந்ததும் போலீஸ் என்ன செய்தது? விஜூவின் பணம் எப்படி காணாமல் போனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜு, தமிழ் சினிமாவிற்கு ஒரு வரவுதான் என்றாலும், இன்னும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும் என்று தோன்றுகிறது. நாயகி பல்லவி டோரா அழகாக வந்து செல்கிறார்.

ஷாஜகானின் இசையில், பொடலங்காய புட்டு பாருடா என்ற பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷும், ராஜலட்சுமியும் பாடியுள்ளனர். மணிஅமுதவன் வரிகளில், பிரியங்காவும் – முகமது இஸ்லாமும் பாடிய இறகைப் போலே பாடல் நன்றாக உள்ளது

முதல் பாதி முழுக்க மோசடி காட்சிகளை மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் படத்தின் இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறார்.

விஜூ (கிருஷ்ணா), பல்லவி டோரா ( ராதா ), அஜெய்குமார் ( வெங்கி ), N.C.B.விஜயன் ( அமைச்சர் ), வெங்கடாச்சலம் ( கார்த்திக் ), நீனு சுகுமாரன், O.S.சரவணன், மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஷாஜகான்
தயாரிப்பு – JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் – K.ஜெகதீசன்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.