இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கார் ஷோரூமில் பணியாற்றும் மனோகர் (சிவகார்த்திகேயன்), இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். கீர்த்தனா ( நயன்தாரா ) தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகா சீரியல் பைத்தியமாக இருந்து வருகிறார். இதனால் சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.

அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார் சிவகார்த்திகேயன். தனது அம்மாவுடன் பைக்கில் செல்லும் போது எதிரே வரும் நயன்தாராவின் கார் மோதுகிறது. இங்கே ஆரம்பிக்கும் மோதல் படத்தின் இறுதி வரை தொடர்கிறது. இப்படி இவர்கள் மோதல் சிவகார்த்திகேயனின் மனதில் ஒரு கால கட்டத்தில் காதலாக மலர்ந்தது அதனால் நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க செல்கிறார் அப்போது நயன்தாராவுக்கு விபத்து நேரிடுகிறது, நயன்தாராவை சிவகார்த்திகேயன் காப்பாற்றுகிறார் , ஆனால் நயன்தாரா தன்னை பழிவாங்கிய சிவகார்த்திகேயனை பழிவாங்க, காதலிப்பது போல் நடித்து அவரை வெளிநாடு அழைத்துச் சென்று ஜெயிலில் தள்ளுகிறார். அதன்பிறகு இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் – நயன்தாரா இருவருமே தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இவர்கள் சந்திக்கும்(சண்டையிடும்) காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. சிவகார்த்திகேயன் பக்கத்துக்கு வீட்டு பையன் மாதிரி நடிப்பிலும், நடனத்திலும் கலக்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா என இத்தனை காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தும் காமெடி ஓரளவிற்கு மட்டுமே ஒர்க்கவுட் ஆகியுள்ளது. வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் ‘டக்குனு டக்குனு’ பாடல் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் கலர்புல்லான காட்சிகள் அருமை!

காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ ஷங்கர்
இசை ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்
இயக்கம் எம். ராஜேஷ்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.