Munnodi Movie Poster

Escape Artists Motion Pictures Release  Harish,Yamini Starning Munnodi Movie Poster. Director by S.P.T.A.Kumar.

ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான ​“முன்னோடி” படத்தை மதனின்

எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​ வாங்கி வெளியிடுகிறது​!

விண்ணைத் தாண்டி வருவாயா, அழகா் சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி
ரங்கா, வருத்தப்படாத வாலிபா் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல்,
மாப்பிள்ளை சிங்கம், கொடி போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த
நிறுவனம் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​.
தற்போது “என்னை நோக்கி பாயும் தோட்டா​”, விக்ரமின் அடுத்த படம் என
சுறுசுறுப்பாக இருக்கும் மிக முக்கிய தயாரிப்பாளரான மதன் தனது எஸ்கேப்
ஆா்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக முன்னோடி படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ  அதைப் பொறுத்தே
அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.​​

‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது
முக்கியம்’ என்கிற  இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான்
‘முன்னோடி’. இதை கதை, திரைக்கதை, வசனம்  எழுதி புதுமுக இயக்குநர்
எஸ்.பி.டி.ஏ.குமார்  இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர்,
சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து
தயாரி​த்திருக்கிறார்கள்.

ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு
கதாநாயக நடிகர்கள்  இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். கங்காரு’
படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ பாவல் நவநீதன் இருவரும்
வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சித்தாரா,ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன்,
வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி
ஒளிப்பதிவு செய்துள்ளார்., இசையமைக்கிறார் கே.பிரபு ஷங்கர்

படத்தின் எடிட்டிங்கை என்.சுதா கவனிக்க,  நடனம் அமைத்திருக்கிறார்
ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் – டேஞ்சர் மணி.

‘முன்னோடி’  படம்  சென்னையில் நடக்கும் கதை என்றாலும்​, ​

பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.

படப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது.

‘முன்னோடி’ படம் பற்றி தயாரிப்பாளா் மதன் கூறும் போது, சமீபத்தில்
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், சினிமாவில் நம்மால் யாருக்காவது உதவ
முடியுமா என்ற நோக்கோடும் என் தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு நடுவேயும், சில
படங்களைப் பார்த்து வெளியிட்டு வருகிறோம்.  அதன்படி, “முன்னோடி”
படத்தையும் பார்க்க நோ்ந்தது.  மிக மிக நோ்த்தியாகவும், அதிரடியாகவும்
விறுவிறுப்பான படத்தை எடுத்திருந்தார்.  புதுமுக இயக்குநா் குமார்
“ரேணிகுண்டா” படத்தைப் போன்ற களத்தில் மிக அழமான கதையுடன்
மிரட்டியிருந்தார். சமீபத்தில் வெளியிடுவதற்காக நான் பார்த்தது 100
படங்களுக்கு மேல் இருக்கும்.  அதில் என்னை பாதித்தது “முன்னோடி” படம்
என்று சொல்லலாம்.  யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இவ்வளவு அழகான படத்தை
எடுத்ததற்கு கட்டிப்பிடித்து எனது வாழ்த்தை தெரிவித்த கையுடன் மறுநாளே
படத்தை நானே வெளியிடுகிறேன் என ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
எல்லோருக்கும் பிடித்த படமாக நிச்சயம் “முன்னோடி” இருக்கும்.  வெளியிட்டு
தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது,

“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா?
என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும்
தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை
அமைத்துள்ளேன்.
படத்தில் நான்கு  பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ​

‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீள  கமர்ஷியல் படமாக
இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல்
இருக்கும்”.

​ படம் பார்த்ததும் மதன் சார் கட்டிப்பிடித்து பாராட்டினார். அதுவே
புதுமுக இயக்குனரான எனக்கு பெரிய வெற்றி. மேலும் இன்றுள்ள வியாபார
போராட்டத்தில் படம் வெளியாவது என்பது குதிரைக் கொம்பு. ஆனால் மிகப்பெரிய
நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இது என் கொடுப்பினை. பெரிய நிறுவனம்
வெளியிடுவதால் எளிதாக இந்த படம் மக்களிடம் சென்றுவிடும். மக்களிடம்
சென்றுவிட்டால் அவர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடுவார்கள்.

வெளியிடும் மதன் சாருக்கும்​,​ நண்பர் ஜேம்ஸ் -க்கும் நன்றி.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.