தொடர்ந்து ஹிட் பாடல்களை அளித்து வரும் இசையமைப்பாளர் இமானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு, போக்கிரி ராஜா படக்குழுவின் சார்பாக தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா மற்றும் ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு ஆகியோர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். படத்தின் கதாநாயகன் ஜீவா, கதாநாயகி ஹன்சிகா மற்றும் நடிகர் சிபிராஜ் ஆகியோர் வெளியூர் படப்பிடிப்பு காரணமாக தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்த போக்கிரி ராஜா படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
Leave a Reply