லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘திரைப்படம் நட்புனா என்னானு தெரியுமா’

சிவா, ராஜா, மணி ஆகியோர் ‘தளபதி’ படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் 3 குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் மூன்றுபேரும் நண்பர்களாக வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

கவின், அருண்ராஜா, ராஜு ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். 10 வகுப்புத் தேர்வின்போது காப்பியடிப்பதற்காக தன்னிடம் பேப்பரை வாங்கிய ஒரு பெண், அதனைத் திருப்பித் தராததால் தேர்வில் தோல்வியடைகிறார் கவின். இதனால், பெண்களை நம்பக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான்.

வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.

தங்கள் பகுதியில் இருக்கும் காதல் ஜோடிகளாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறார்கள். இதனால் இவர்கள் தொழில் பிரபலமடைகிறது. இந்நிலையில் மூன்று பேரும் ஒரு பெண்ணை பார்க்கிறார்கள். மூன்று பேரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் அந்த பெண்ணை காதலிக்க இவர்களுக்குள் தொடங்குகிறது பிரச்னை.இறுதியில் அந்த பெண் யாரை கரம் பிடித்தார். என்பதே மீதிக்கதை

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கவின், அவரது நண்பர்களாக ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கும் ராஜு, அருண்ராஜா காமராஜா ஆகிய மூன்று பேருமே மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருப்பதோடு, ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள்.

கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், வெகுளித்தனமான நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். இளவரசு தன்னுடைய ஏரியாவில் கெத்து காட்டுகிறார். அழகம்பெருமாள், இளவரசு உள்ளிட்டவர்கள் வழக்கம் போல தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இசையமைப்பாளர் தருண், சூப்பரான பாடல்கள் தந்திருக்கிறார். ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது. இயக்குநர் சிவா அரவிந்த், இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய காதல் மற்றும் காமெடி படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை நகைச்சுவை விரும்புவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

நடிகர்கள் கவின்,அருண்ராஜா காமராஜ், ராஜு, ரம்யா நம்பீசன்ள்
இசை தரண்
ஒளிப்பதிவு யுவராஜ்
இயக்கம் சிவா அரவிந்த்
தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.