பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.

ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரணக்கு உள்ளாகும் மாசிலாமணி (பார்த்திபன்) போலீஸ் கைது செய்கிறது. அவ்வப்போது தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, தன்னிலை மறக்கும் மாசிலாமணி, தொடர்பின்றி முன்பின் உரையாடுகிறார். பல கட்ட போராட்டங்களுக்குப் பின், போலீஸ் விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் அதிர்ச்சிகரமான பதில்களே ஒத்த செருப்பு.

பார்த்திபன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வாட்ச்மன் வேலை செய்பவர். தான் வேலை செய்யும் இடத்திலேயே தன்னுடைய மனைவிக்கும் வேலை வாங்கிக் கொடுக்கிறார். இவர்கள் இருவரின் வேலை தன்னுடைய மகனை எப்படியாவது ஒரு விதமான கொடிய நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் என்பதுதான். வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய மனைவிக்கு ஏற்படும் இன்னல்களும், அவலங்களும் குறித்து கூறி உள்ளார். இதற்கிடையே பல கொலைகளும் நடந்துள்ளன.திடீரென்று ஒரு கொலை செய்துவிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்திபனை அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர் டெபுடி கமிஷனர். அந்த விசாரணையில் பார்த்திபன் ஒரு கொலை மட்டும் செய்யவில்லை நிறைய சில கொலைகளை செய்து இருக்கிறார் என்று அவரே கூறுகிறார். என்ன காரணத்தால் அவர் கொலை செய்து கொண்டு வருகிறார்? இப்படி கொலைகளை செய்யும் இடத்தில் தடயமாக ஒத்த செருப்பு உள்ளது. யாருடைய செருப்பு? யாரை கொலை செய்கிறார் ? ஏன் கொலைகளை பார்த்திபன் செய்கிறார்? அவருடைய மனைவியை எப்படி காப்பாற்றுவார்? தன் மகனை காப்பாற்றுவாரா ? என்பது தான் மீதி கதை.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து பார்த்திபனே நடித்து இருக்கிறார். கேமரா பார்த்திபனை மட்டும் காட்டுகிறது. ஆனால் இவர் மூலமாகவே அனைத்து கதாபாத்திரங்களும் நம் கண்முன் வந்து நிற்கிறது.

பொருளாதாரம் ஓர் எளிய குடும்பத்தை எப்படி சிதைக்கிறது எனக் கூறும் ஒத்த செருப்பு, திருமணத்தை மீறிய உறவுக்கு அழைத்து செல்லும் எனக் கட்டமைப்பது மேலோட்டமான பார்வையாகயிருக்கிறது. ஒரு பக்கமிருந்து மட்டுமே அனைத்தையும் பார்த்து, அந்தப் பக்கத்திற்கான அனைத்து சாத்தியங்களையும் திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பாக வந்திருக்கிறது ஒத்த செருப்பு. ஓர் அறைக்குள் நிகழும் கதை என்றாலும்கூட, ராம்ஜியின் ஒளிப்பதிவு பல கோணங்கள், நிறங்கள் மூலம் நம்மை வசியப்படுத்துகின்றன. படத்தில் கேட்கும் அனைத்து குரல்களுக்கும் உருவம் கொடுப்பதில் ரசூல் பூக்குட்டியின் பங்கு முக்கியமானது. ஒலியமைப்பின் வழியாகப் பார்வையாளனின் கவனத்தைத் திசை மாறாமல் படத்தின் மீது செலுத்த வைத்திருக்கிறார் இவர். படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்தும் ஒத்த செருப்புக்குக் கைகொடுத்திருக்கிறது.

நடிகர் பார்த்திபன்
இயக்குனர் பார்த்திபன்
இசை சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு ராம்ஜி
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.