விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுக்கிறார். “நான் ‘பைரவா ‘படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை ” என்கிறார்.
அவர் மேலும் பேசும் போது,
“நான் இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிறேன். ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறேன்.
ஆனால் நானே என் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. என் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசை. நான் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் வெளி நிறுவனப் படங்கள்தான்.
‘தனிமுகம்’ என்கிற படம் இப்போது தொடங்கப் பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித்.இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர். சஜித் என்னிடம் சொன்ன கதை பிடித்து விட்டது. இது ஹீரோயிசம் வெளிப்படுத்தும் படமல்ல . இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை.
கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள கதைகளிலும் நடிப்பேன்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன். அதில் வில்லனாக வேறு நடிகர்தான் நடிக்கிறார்.
கதை நாயகனாக சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இவை தவிர, புதிதாக சிலபடங்களும் இருக்கின்றன.” என்கிறார்.
Leave a Reply