‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழாக்கம்தான் ‘பக்கிரி’. ‘ரொமைன் பெர்டோலாஸ்’ எழுதிய கதையை ‘கென் ஸ்காட்’ இயக்கியிருக்கிறார்.

மும்பை, காவல்துறை சீர்திருத்தப்பள்ளியில் மூன்று சிறுவர்கள் கைதிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு போதனை செய்யும் ஆசிரியராக ராஜா குமரகுருபரன் (தனுஷ்). சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக தன்னுடைய கதை என்று சொல்லி ஒரு கதையைச் சொல்வதோடு கதை விரிகிறது படம்.

அப்பா யாரென்று தெரியாமல் அம்மாவிடம் வளரும் தனுஷ் சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார்.

பாரிஸ்ஸில் உள்ள ஒரு ஃபர்னிச்சர் கடையில் நுழைகிறார். அங்கே பணி செய்யும் மேரி ரிவியேர் (எரின் மோரியார்டி) என்ற பெண்ணைச் சந்திக்கிறார், அவரை ஆரம்பத்தில் ஏமாற்றுகிறார். ஆனால் அவளது அழகும், ஆளுமையும் தனுஷ்க்கு பிடித்து விடுகிறது. மறுநாள் ஈபிள் டவரில் சந்திப்பதாக உறுதி செய்கின்றனர். ஆனால், தனுஷ்ஷிடம் பணம் இல்லாததால் அந்த ஃபர்னிச்சர் ஸ்டோரில் பதுங்கிவிட்டு, காலையில் கிளம்பலாம் என நினைக்கிறார், அவர் பதுங்கி இருக்கும் ஃபர்னிச்சர் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு லண்டன் செல்கிறது. அப்போது, காவல்துறை அவரை கைது செய்கிறது.

அதன்பின்பு, அவருடைய பாஸ்போர்ட் போலி என்று கிழித்தெரிந்து வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது. ரோம், இத்தாலி, திரிப்போலி, லிபியா என ஒவ்வொரு நாட்டிலிலும் வெவ்வேறு ஏமாற்றத்துடன் பல நாடுகள் தனுஷ் பயணித்துக்கொண்டே இருக்கிறார் இறுதியில் அவர் அப்பாவைச் சந்தித்தாரா, காதலியிடம் காதலைச் சொன்னாரா தன் கதை மூலம் மூன்று சிறுவர்களை நல்வழிப் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு சிறப்பு. அவரது திறமைக்கு தீனி போடும் விதத்தில் நகைச்சுவை, எமோ‌ஷனல், காதல் எல்லாம் கலந்த கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. பாரிஸ்ஸில் இருக்கிற மாதிரியான உணர்வை நம்மிடம் கடத்தி செல்கிறார். தனுஷ்ஷின் காதலியாக நடித்திருக்கும் எரின்மோரியார்டி தன்னுடைய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி கலக்குகிறார். அவருடைய நடிப்பு தமிழுக்கும் அப்படியே பொருந்தி விடுவதுதான் ஆச்சர்யம். தனுஷ்ஷூடன் பயண நண்பனாக நடித்திருக்கும் அமெரிக்கா நடிகர் பர்காத்அப்தி தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இசையமைப்பாளர் நிக்கோலஸ் எரேரா பின்னணி இசை மற்றும் துள்ளல் பாடலுக்கான இசை என கலக்குகிறார். சில நேரங்களில் இந்தி படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட், இதை ஒரு பிரான்ஸ் படம் என்று எடுத்திருந்தாலும், முழுக்க முழுக்க தனுஷ்ஷை மட்டும் மைப்படுத்தி எடுத்ததற்காக பாராட்டலாம்.

நடிகர்கள் : தனுஷ், எரின்மோரியார்டி, பொனைஸ்பெஜோ, பர்காத்அப்தி,அபெப்ஜப்ரி
இசை : நிக்கோலஸ் எரேரா
இயக்கம் :கென் ஸ்காட்
தயாரிப்பு : லக்போஸி, கோல்ட்மேன்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.