S T தமிழரசன் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் கதை திரைக்கதை வசனம்  இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் கார்த்தீஸ்வரன், காயத்ரி ரமா, அர்ஜுன், நியதி, முத்துக்காளை, நெல்லை சிவா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேய் இருக்க பயமேன்’

பேயாக இருக்கும் தம்பதிகள் பெரிய பங்களாவில் சந்தோஷமாக வசித்து வருகிறார்கள். சென்னையில் வசிக்கும் ஹிரோ – ஹீரோயினுக்கு விருப்பம் இல்லாமல்  பெற்றோர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு வாழ்க்கையைத் தொடங்க அந்த பேய்கள்  இருக்கும்  பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கிருக்கும் பேய் தம்பதிகள்  வீட்டை விட்டு துறத்துவதற்காக, இவர்களுக்கு பலவித தொல்லைகளை கொடுத்து வருகிறார்கள். . அந்த பேய்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தம்பதியினருக்கு, பேய்கள் என்றால் என்ன? என்ற புரிதல் கிடைக்க, அதன் மூலம் அவர்கள் பேய்களுக்கு பலவித கஷ்ட்டங்களை கொடுக்கிறார்கள். இறுதியில் அந்த வீட்டில் இருந்து வெளியேறியது தம்பதியினரா அல்லது பேய்களா, என்பதே படத்தின் மீதிக்கதை. .

தம்பதியாக ஹீரோ கார்த்தீஸ்வரனும், ஹீரோயின் காயத்ரி ரமாவும் கச்சிதமாக பொருந்துகிறார்கள். விருப்பம் இல்லாத திருமணத்தால், எலியும், பூனையுமாக அவ்வபோது சண்டை போட்டுக்கொள்ளும் கணவன், மனைவி நகைச்சுவை கலாட்டா ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் பேய்களே பயந்து போகும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் டார்ச்சர்கள் அனைத்தும் ரசிக்கும் வகைகள். உள்ளது. ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் காமெடி கலந்த நடிப்பால் கவர, அவருடன் போட்டி போடும் புது மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் காயத்ரி ரமாவும் நடிப்பில் அசத்துகிறார்.

அப்பாவி கதாபாத்திரத்தில் கார்த்தீஸ்வரன். மனைவியுடன் அசட்டுத்தனமாய் சண்டை போடுவதாகட்டும், பேய்களை அலட்சியப்படுத்தி அக்கப்போர் செய்வதாகட்டும் தன்னால் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார். நாயகி காயத்ரி ரெமா. கதாபாத்திரம் உணர்ந்த அவரது நடிப்பு கலகல’ப்பூட்டுகிறது. பேய்களாக வருகிற ஜோடி அர்ஜுன் – நியத்தி. பார்ப்பதற்கு அழகு  போலி சாமியாராக வரும் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளராக வரும் முத்துக்காளை, நிஜமான சாமியாராக வரும் நெல்லை சிவா, என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது வேலை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அபிமன்யுவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளினும் கதைக்கு ஏற்ப பணிபுரிந்துள்ளார்கள். படத்தொகுப்பாளர் ஜிபி கார்த்திக் ராஜா, கத்திரிக்கு கூடுதல் வேலை கொடுத்திருக்கலாம்.

கதையின் பெரும்பகுதி ஒரே வீட்டில் நடக்கிறது. கிட்டத்தட்ட படம் முழுக்க நாயகனையும் நாயகியையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். படத்தின் முன் பாதியை, பாதியாகக்கூட குறைத்திருக்கலாம். இயக்குநர் சி.கார்த்தீஸ்வரன், பேய் என்றால் என்ன? பேய் பயத்தை எப்படி போக்குவது? போன்ற விஷயங்களை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கும் முறை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘பேய் இருக்க பயமேன்’ பேய்களுக்கே பயம் காட்டும் தம்பதிகள்

பேய் இருக்க பயமேன்

கார்த்தி ஆக கார்த்தீஸ்வரன்

வைஷ்ணவி ஆக காயத்ரி ரமா

இந்திரன் ஆக அர்ஜுன்

கோதை ஆக நியதி

கிலிபிலி கில்மா சுவாமி ஆக கோதை சந்தானம்

ஆராய்ச்சியாளராக முத்துக்காளை

நல்ல சாமியாராக நெல்லை சிவா

வெட்டியானாக அபிராம்

கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம் சீ.கார்த்தீஸ்வரன்

ஒளிப்பதிவு
அபிமன்யு

இசை
ஜோஸ் பிராங்கிளின்

படத்தொகுப்பு
GP கார்த்திக் ராஜா

நடனம்
ரேகா

பாடியவர்
சைந்தவி

தயாரிப்பாளர்
S T தமிழரசன்

மக்கள் தொடர்பு
MP ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published.