கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவ ர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

தான் இளமையாக நவீனமாக நடந்துகொள்வதை மகன் (லிவிங்ஸ்டன்) விரும்பாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் ஒரு பாட்டி ( சச்சு) அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது தனது பேத்தி போல ( ஷில்பா மஞ்சுநாத்) மாறிவிடுகிறார்.

பேத்தியை காதலிக்கும் இளைஞன் (விவேக்) பேத்தி போல மாறி விட்ட பாட்டியிடம் சிக்கி குழம்புகிறான் .

ஒரு நிலையில் பேத்தி போல மாறிய பாட்டியின் உடல் பழைய நிலைக்கு மாற ஆரம்பிக்கிறது . இளம் பெண்ணாக நிறைய விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் பாட்டி அதிர்ச்சி ஆகிறார் .

அதே நேரம் கார்ப்பரேட் நிறுவன அதிகாரி ( சரவணன் சுப்பையா ) ஊரில் உள்ள ஆதரவற்ற பாட்டிகளை எல்லாம் இளம்பெண்ணாக மாற்றி வெளிநாட்டுக்கு அனுப்ப முயல அவர்களை ,பாட்டி – பேத்தி சேர்ந்தது காப்பாத்தினார்களா ? இல்லையா ? என்பததே படத்தின் மீதிக்கதை .

ஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் விவேக், லிவிங்ஸ்டன் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் விஜயன்.சி, பாட்டி பேத்தியாக மாறி அடிக்கும் லூட்டிகளை காமெடியாக காட்டியிருப்பதோடு, எந்தவித ஆபாசமும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

நடிகர் விவேக் ராஜ்
நடிகை ஷில்பா மஞ்சுநாத்
இயக்குனர் விஜயன்.சி
இசை சார்லஸ் தனா
ஓளிப்பதிவு இ.ஜே.நவ்‌ஷத்
மக்கள் தொடர்பு கே.எஸ்.கே.செல்வா

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.