Pottu Movie Stills – Bharath, Actress Iniya, Namitha, Srushti Dang

Actor Bharath, Actress Iniya, Namitha, Srushti Dange starring Pottu Movie Stills. Directed by Vadivudaiyan. Bharani, Nikesh Ram, Manisha Yadav, Swetha Ashok, Saravanan, Karunas, Suman, Singampuli, Urvashi in other cast. PRO –  Mounam Ravi

 2000 அடி உயர மலைப்பகுதியில  பிரமாண்டமான அரங்குகள் “  பொட்டு “ படத்திற்காக படமானது.

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்   –  செந்தில்   /   ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்

இசை   –  அம்ரீஷ்   /   பாடல்கள்   –  விவேகா, யுகபாரதி,

ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   –  எலீசா   

கலை  –  நித்யானந்தம்

நடனம்    –  ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்

தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  –  வடிவுடையான்.

படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..

பரபரப்பான பேய் படமாக இது இருக்கும். மருத்துவ கல்லூரி பின்னணியில் இந்த படம் இருக்கும். சமீபத்தில் பொட்டு படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயர மலைப்பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சமந்தப்பட்ட காட்சிகள் பத்து நாட்கள் படமாக்கப்பட்டது.

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது வண்டி எதுவும் போகாது. 4கிலோமீட்டர் எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்தச் சென்று படமாக்கினோம். சவுகார்பேட்டை படத்தில் இருந்த குறைகள் நிச்சயமாக பொட்டு படத்தில் இருக்காது. வேறு மாதிரி இருக்கும் என்றார் இயக்குனர் வடிவுடையான்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.