இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டியல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் முக்கியமான படமாகவும் கவனம் ஈர்த்து வருகிறது.
அக்ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம் ஆகியோர் அடங்கிய ‘கண்ணப்பா’ நட்சத்திர குழுவில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரன் மூலம் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் இணைந்துள்ளார்.
’கண்ணப்பா’ திரைப்படம் இந்திய காவியமாக மட்டும் இன்றி, காட்சி மொழியின் மூலம் மக்களுக்கு பிரமாண்டமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு, இந்த கதையை மிக ஆழமாகவும், பிரமாண்டமாகவும் வடிவமைப்பதற்காக 7 வருடங்களாக மிக நுணுக்கமாக பணியாற்றியுள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கும் ‘கண்ணப்பா’ சிவபெருமானின் பக்திமான் கண்ணப்பாவின் அசைக்க முடியாத பக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உருவாகி வருகிறது.
இது குறித்து விஷ்ணு மஞ்சு கூறுகையில், “என்னுடைய அன்பு நண்பர் பிரபாஸுடன் பல்வேறு மொழிப் பின்னணியில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, உண்மையான பான் இந்திய படைப்பாக ‘கண்ணப்பா’-வை உருவாக்கி வருகிறேன். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொள்ளும் திறனும் நான் மிகவும் ரசிக்கும் குணங்களாகும்.
அக்ஷய் குமார் மற்றும் மோகன்லால் சார் ஆகியோருடன் நடிகர் பிரபாஸை இணைத்திருப்பது பிராந்திய எல்லைகளைத் தாண்டி ஒரு கலாச்சார நிகழ்வாகவும் கண்ணப்பா பார்க்கப்படும். ஒவ்வொரு நடிகரும் தங்களின் தனித்துவமான திறமையையும், உழைப்பையும் கொண்டு வருவதன் மூலம் ‘கண்ணப்பா’ நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.” என்றார்.
பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கெச்சா கம்பக்டீ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். நடனக் காட்சிகளை வடிவமைக்கும் பிரபுதேவா என தொழில்நுட்ப குழுவினரும் உலக அளவில் புகழ்பெற்றவர்கள் ஆவர்.
விறுவிறுப்பான கதையுடன் பிரமாண்டமான காட்சியுடன் உருவாகும் ‘கண்ணப்பா’ கடந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர கோவிலில் தொடங்கப்பட்டு, தற்போது படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply