Prwabhu Deva, NivethaPethuraj starrer action entertainer commences tomorrow

பிரபுதேவாவின் அடுத்த திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்கி உடையில் திரையில் வளம் வர வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாகும். காக்கி உடையில் நடித்து தங்களுக்கென ஒரு தனி பெயரினை பெற்றவர்கள் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா போன்றவரை கூறலாம்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் இணையவுள்ளார். நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மையுடன் திரையுலகை கலக்கிவரும் நடிகர் பிரபுதேவா-வின் மெர்குரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் டிக் டிக் டிக், இத்திரைப்படம் வரும் ஜூன் 22-ஆம் நாள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஏசி முகில் தற்போது இந்த படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.