சென்னையில் பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான ‘முக்தா’ சீனிவாசன் உடலநலக்குறைவால் காலமானார்.

சிவாஜிகணேசன் நடித்த அந்தமான் காதலி, ரஜினி நடித்த பொல்லாதவன், ஜெயலலிதா – முத்துராமன் நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்த முக்தா சீனிவாசன் ( வயது 89 ) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று இரவு காலமானார். மனைவி பெயர் பிரேமா, அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் ‘முக்தா’ சீனிவாசன். தஞ்சையை பூர்விகமாக கொண்டவர். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-ஆவது படமான சூரியகாந்தி உட்பட 65 திரைப்படங்களை இயக்கியவர். பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். பதிப்புத் துறையிலும் செயலாற்றி வந்தார்.

சமீப காலமாக இவர் உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

ஏறக்குறைய 70 வருடங்களாக தமிழ் திரையுலகில் பிரபலாமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது.

அவரது உடல் தி.நகரில் உள்ள வைத்திய ராமன் தெருவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘முக்தா’ சீனிவாசன் உடல் நலக்குறைவால் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய் இரவு காலமானார். அவருக்கு வயது 88 ஆகும்.

அவரது ஈமச் சடங்குகள் புதன்கிழமை அன்று நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published.