இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய பார்வைகளை அழுத்தமாக எடுத்துச்சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள “ரகுதாத்தா” திரைப்படம், வீட்டில் ஓடிடியில் குடும்பத்தோடு ரசித்துக் கொண்டாட மிகச்சரியான திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ZEE5 தளத்தில் வெளியான ‘அயலி’ மற்றும் தி ‘கிரேட் இண்டியன் கிச்சன்’ படங்களைப் போல “ரகுதாத்தா” திரைப்படமும், பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி ZEE5 இல் வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம் வெளியான 24 மணி நேரத்திற்குள், ரசிகர்களின் பேராதரவில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 இல் “ரகுதாத்தா” தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.