RAJINIKANTH MEETING WITH RMM OFFICE BEARERS – CHENNAI

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மே 10 இன்று காலை 10.45 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், மாநில நிர்வாகி சுதாகர் உட்பட 6 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகக கூறப்படுகிறது. மேலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர்களை அதிக அளவில் மன்றத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுதும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளர்களை சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதற்காக முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.