நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் ‘ரெட் பிலோவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார்.
“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் குறிப்பிடத்தக்க சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட ‘ரெட் பிளவர்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் மிகுந்த வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு படத்துக்கு கிடைத்துள்ளது.
இவர்களது சந்திப்பின் போது, ‘ரெட் பிளவர்’ படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி கண்டுக்களித்தார். ட்ரைலர் பார்த்து வியப்படைந்த அவர், பட குழுவினரின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காகப் பாராட்டினார். “படம் மிகவும் பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார், குறிப்பாக இசை மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்குறதாகவும் தெரிவித்தார்,காட்சி ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் திறமையான சினிமா அனுபவத்தை உருவாக்கும் படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் மிக பிரம்மாண்டமாக அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள ‘ரெட்பிளவர்‘ திரைப்படம்,
தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக இருக்கும். கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்க, படத்தின் மற்ற முக்கியகதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான்விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபிகண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேவ சூர்யா, இசையமைப்பளராக சந்தோஷ் ராம், படத்தொகுப்பு அரவிந்த், விஷுவல் எஃபெக்ட்களை பிரபாகரன் மேற்பார்வையிட, கதை, திரைக்கதை வசனம் மற்றும் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.
இணையற்ற அதிரடி ஆக்சன் கலந்த திரைப்பட அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கூடிக்கொண்டே இருக்கிறது. விஜய்சேதுபதியின் பாராட்டு பட குழுவினருக்கு ஊக்கத்தை அளித்துள்ளது,
ரெட் பிளவேர் திரைப்படம் இது வரை தமிழ் சினிமா திரைப்படத்தில் பேசப்படாத புதிய விஷயங்களை வெள்ளி திரையில் மிக பிரம்மாண்டமாக சித்தரிக்கும்
வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
Leave a Reply