ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அந்தகன்’
பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் பார்வை நன்றாக தெரிந்தும் பார்வையற்றவர் போல வாழ்ந்து வருகிறார் கண் தெரியாதவர் போல் இருந்தால் மட்டுமே பியானோ வாசிப்பதை அனைவரும் விரும்பி கேட்பதாக கூறுகிறார்.. இந்நிலையில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிக்காக பணம் சேமித்து வருகிறார்.
ஒரு சாலை விபத்தில் பிரியா ஆனந்த்தை சந்திக்கும் பிரசாந்த், அவருடன் பழக்கம் ஏற்பட பிரியா ஆனந்த் தன் அப்பா நடத்தி வரும் பாரில் வேலை வாங்கி கொடுக்கிறார். ஒரு நாள் பாரில் பியானோ வாசிப்பதை பார்த்து பிரபல நடிகரான கார்த்திக் பிரசாந்த்தை பாராட்டுகிறார்.
மறுநாள் திருமண நாள் என்பதால் தனது இரண்டாவது மனைவியான சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு வரும்படி பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.,வீட்டிற்கு செல்லும் பிரசாந்த், அங்கு கார்த்திக் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பிரசாந்த் பார்வையற்றவர் என்று நினைத்து, கள்ளக்காதலன் சமுத்திரகனியுடன் சேர்ந்து கார்த்திக் சடலத்தை மறைக்கிறார்கள். இதை பிரசாந்த் பார்த்து விடுகிறார்.
இந்நிலையில் பிரசாந்துக்கு கண் பார்வை இருப்பதை தெரிந்துக் கொள்ளும் சிம்ரன், அவருக்கு உண்மையாகவே கண் பார்வை போகும் படி செய்து விடுகிறார். மறுபுறம் சமுத்திரகனி பிரசாந்த்தை கொல்ல நினைக்கிறார்.இறுதியில் பிரசாந்துக்கு கண் பார்வை கிடைத்ததா? இல்லையா? லண்டன் செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘அந்தகன்’ படத்தின் மீதிக்கதை.
பியானோ இசைக் கலைஞராக நடித்திருக்கும் பிரசாந்த் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கண் பார்வை இருக்கும் போது சுறுசுறுப்பாகவும் கண் பார்வை இல்லாத போது இயல்பான நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்.
நாயகியாக வரும் ப்ரியா ஆனந்த்திற்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் சிம்ரன் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது. ரவி யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
2013ல் இந்தியில் வெளிவந்த அந்தாதூன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் படத்தை ரீமேக் செய்யாமல் ரீமேட் செய்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் விறுவிறுப்பாக படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘அந்தகன்’ ஆணழகன்
மதிப்பீடு : 3.5/ 5
நடிகர்கள் : பிரசாந்த், சமுத்திரக்கனி, சிமரன், யோகிபாபு, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், வனிதா,
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம் : தியாகராஜன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply