பீப்பிள் மீடியா ஃபேக்டரி – டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிப்பில் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம், யோகிராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சாலா’
வட சென்னை, ராயபுரம் பகுதியில் 1969ல் இருந்து பிரபலமானது பார்வதி பார் இந்த மதுபான கடையை கைப்பற்றுவதற்காக அருள்தாஸ் – சார்லஸ் வினோத் இரண்டு குழுக்களும் மோதிக் கொள்கிறார்கள். நாயகன் தீரன் சிறுவயதில் அருள்தாஸ் உயிரை காப்பாற்ற தம்பி போல பார்த்துக் கொள்கிறார் அருள்தாஸ்
மறுபுறம் பள்ளி ஆசிரியராக இருக்கும் நாயகி ரேஷ்மா பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களை சேர்த்துக் கொண்டு மதுபான கடையை மூட சொல்லி போராட்டம் நடத்துகிறார். இதனால் நாயகன் தீரன் மற்றும் ரேஷிமா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நாளடைவில் காதலாக மலர்கிறது.
இந்நிலையில் கெளரவமாக கருதப்படும் பார்வதி மதுபான கடையை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் நாயகன் தீரன் பார்வதி மதுபானக் கடையை கைப்பற்றினாரா? இல்லையா? தீரன் – ரேஷ்மா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா/ இல்லையா? என்பதே ’சாலா’ படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தீரன் அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார். காதல், பாசம், அக்கறை , அதிரடி சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார். இவரது நடிப்பை பார்க்கும் பொது இயக்குனர் அமீரின் சாயல் போல தெரிகிறது
பள்ளி ஆசிரியாராக நடித்திருக்கும் நாயகி ரேஷ்மா இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மதுபான கடைகளுக்கு எதிராக போராடும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. சார்லஸ் வினோத், அருள்தாஸ் ஆகியோர் எதிர்மறை வேடங்கள் ஏற்றிருந்தாலும் அதில் நேர்மறையாக நடித்து பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தீசன் இசையில் .பாடல்கள் கேட்கும் ரகம்,.பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது. வீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மதுப்பழக்கத்தால் நாட்டிட்டிற்கும் வீட்டிற்கும் எந்த வகையில் கேடாக வந்து முயக்கிறது என்பதை திரைப்டமாக உருவாக்கியிருக்கிறார் எஸ்.டி.மணிபா இத்திரைப்படத்தை பார்ப்பவர்கள் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டமாட்டார்கள் மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படி அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’சாலா’ பலசாலி
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன், ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம்,
இசை : தீசன்
இயக்கம் : எஸ்.டி.மணிபால்
மக்கள் தொடர்பு ; நிகில் முருகன்
Leave a Reply