லஹரி பிலிம்ஸ் & வீனஸ் எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் உபேந்திரா இயக்கத்தில் உபேந்திரா, ரீஷ்மா நானய்யா, முரளிசர்மா, ரவி சங்கர், சது கோகிலா, அச்யுத் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’யுஐ’ (UI)
இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஒரு தரப்பு கொண்டாட மற்றோரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில் முன்னணி திரைப்பட விமர்சகரான முரளிசர்மா இத்திரைப்படத்தை 4 முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார்.
இதனையடுத்து விமர்சகர் முரளிசர்மா இயக்குனர் உபேந்திராவை தேடி செல்கிறார். இறுதியில் விமர்சகர் முரளிசர்மா இயக்குனர் உபேந்திராவை நேரில் சந்தித்தாரா? இல்லையா? விமர்சனத்தை எழுதி கொடுத்தாரா? இல்லையா? என்பதே ’யுஐ’ (UI) படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் உபேந்திரா, சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் சத்யாவாக மென்மையானவராகவும் . கல்கியாக மிரட்டலானவராகவும் இரு வேடங்களிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா நானையா சத்யாவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாடல் காட்சி மற்றும் கவர்ச்சிக்காகவே மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், ரவி சங்கர், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்கும் ரகம்.
நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்தான் யுஐ’
இயக்குனர் உபேந்திரா, உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல் விட்டுவிட்டார்.
மொத்தத்தில் ’யுஐ’ (UI) புதிய முயற்சி
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : உபேந்திரா, ரீஷ்மா நானய்யா, ரவி சங்கர், சது கோகிலா, அச்யுத் குமார்
இசை : பி.அஜனீஸ் லோக்நாத்
இயக்கம் : உபேந்திரா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply