எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மெட்ராஸ்காரன்’

மெட்ராஸைச்  சேர்ந்த நாயகன் ஷேன் மற்றும் நாயகி   நிஹாரிகா  இருவரும் ஒருவரை காதலிக்கிறார்கள். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் திருமணத்தை விமர்சையாக நடத்த முடிவு செய்கிறார் .

இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் காதலி நிகரிகாவை பார்ப்பதற்காக திருமண மண்டபத்திற்கு செல்லும் நாயகன் ஷேன் வழியில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தாவை காரில் மோதி விட  குழந்தை இறந்து விடுகிறது. இந்த குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார்

2 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் நாயகன் ஷேனை  கொலை செய்ய ஒரு குப்பம் வருகிறது . இதில் ஷேன் தாய்மாமா கருணாசை வெட்டி விட தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார் கருணாஸ்.

அங்கு வேலை பார்க்கும் பெண் மூலம்  ஐஸ்வர்யா  குழந்தை இறப்பிற்கு தான் காரணம் இல்லை என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார் நாயகன்.  இறுதியில்  நாயகன் ஷேன் ஐஸ்வர்யா  குழந்தை இறப்பிற்கு காரணம் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? நாயகி நிஹாரிகாவை   திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே ’மெட்ராஸ்காரன்’   படத்தின் மீதிக்கதை.

மலையாள நடிகரான ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம். முதல் படத்திலேயே காதல், நடனம்,, செண்டிமெண்ட் , அச்டின் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்து அனைவரின் கவனத்தை பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகா படத்தில் குறைவாக காட்சிகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார். கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.

நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு என படத்தில் நடித்த அனைவரும் கதை ஒட்டத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில்  ’தை தக்க கல்யாணம்’  திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்  பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலமாக இருக்கிறது.

கிராமத்து கதையை சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் வாலி மோகன் தாஸ்  நாயகன் செய்யாத குற்றத்திற்காக எந்த விதத்தில் எல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்

மொத்தத்தில் ’மெட்ராஸ்காரன்’  மக்கள் மனதில் இடம் பிடிப்பான்

மதிப்பீடு : 3/5

நடிகர்கள் : ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன்
இசை : சாம்.சி.எஸ்
இயக்கம் : வாலி மோகன் தாஸ்  
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

Leave a Reply

Your email address will not be published.