கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரிப்பில் வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன்,ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த் ,பசுபதிராஜ்,ஈஸ்வர் தியாகராஜன் ,துரை சுந்தரம் ,சமுத்திர சீனி ,சக்திவேல் ,நாராயணசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘சியான்கள்’

தேனி அருகே உள்ள கிராமத்தில் வாழும் 7 பெரியவர்களின் நட்பையும் அவர்களின் ஆசைகள், குறும்புகள் போன்றவற்றை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இந்த ‘சியான்கள்’

நாயகன் கரிகாலன் .மெடிக்கல் ஷாப் அனுபவம் அவரை டாக்டராக ஊரே கொண்டாடுகிறது அந்த கிராமத்தில் வாழும் அனைவருக்கும் மருத்துவ உதவி செய்து வருகிறார் நாயகன் அனாதையான இவருக்கும் அந்த ஊரில் இருக்கும் சியான்கள் மீதும் அதிகம் பாசம் கொண்டவராக இருக்கிறார். ஒருவருக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அதை நிறைவேற்ற மற்ற சியான்கள் தங்களால் ஆனதை செய்ய முன்வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து மருமகளிடம் படும் அவமானமதால் 2 பெரியவர்களின் உயிர் பறிபோகிறது. மற்ற 5 பேரும் டிவி நிகழ்ச்சிக்காக சென்னை வருகிறார்கள்.அதில் ஒருவர் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். அவரை இரண்டு நண்பர்கள் காப்பாற்ற முயல்கின்றனர். மருத்துவ செலவிற்காக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இறுதியில் சியான் உயிர்பிழைத்தரா விமான பயண ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் வரும் 7 சியான்களில் நளினிகாந்த் ஒருவரைத் தவிர மற்ற 6 பேரும் அவர்களின் குடும்பத்தினருக்கும், ஊருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் ஊரைச்சுற்றி வருகிறார்கள். கோழி, ஆடுகளை களவாண்டு தின்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. சாமிக்கு நேர்ந்த ஆடாக இருந்தாலும் அதை திருடத் தயங்குவதில்லை.

அரசு கொடுக்கும் முதியோர் பென்சனில் மூக்கு முட்ட குடிப்பது, அடுத்தவர் பொண்டாட்டியை ரசிப்பது, இத்யாதி இவர்களின் பொழுதுபோக்கு. படத்தின் ஹீரோக்கள் சியான்கள் தான் என்றாலும், கதையோடு இணைந்து பயணிக்கும் கரிகாலன் – நிஷா ஹரிதாஸ் ஜோடியும், அவர்களின் மெல்லிய காதலும் அழகு!

டாக்டராக நடித்திருக்கும் கரிகாலன் அதிகம் பேசாமல் அன்பை வெளிப்படுத்தி கவர்கிறார். ஹீரோயின் ரிஷாக்கு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவு. நளினிகாந்த் விமான பயண ஆசையில் உயிரை கையில் பிடித்திருப்பதையும் அந்த ஆசை நிறைவேறும்போது காட்டும் மகிழ்சியும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக பிரகாசிக்கிறது.

பாடலாசிரியர் முத்தமிழ் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பாடல்களை கதை மாந்தர்களுக்கேற்ப, கதைச் சூழலுக்கேற்ப எழுதியதற்காகவும் அவற்றை மனதைக் கவரும் விதத்தில் இசையமைத்திருப்பதற்காகவும் ஸ்பெஷல் பாராட்டு ஒளிப்பதிவு கூடுதல் பலம்.

மண்மணம் கொண்ட மனிதர்களை முடிந்தவரை இயல்பாக பதிவு செய்திருப்பது, வயதானவர்கள் தங்கள் வாழ்நாளைக் கடத்துவதற்குள் எப்படிப்பட்ட ரணங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை அவர்களுக்குள் இருக்கும் குழந்தைத் தனத்தை துல்லியமாக காட்சிப்படுத்தியிருப்பது, போகிற போக்கில் சமூக வலைதளங்களின் பலத்தை எடுத்துக் காட்டியிருப்பது சபாஷ்

இயக்குனர் வைகறை பாலன் காட்சிகளை அமைத்திருக்கும் விதத்தில் நேர்தியான படைப்பிற்கு முழு உழைப்பபையும் செலுத்தி இருப்பதை உணர முடிகிறது

மொத்தத்தில் ‘சியான்கள்’ பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்

படம்: சியான்கள்
நடிப்பு: கரிகாலன், ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாக ராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயண சாமி, இமை ராஜ்குமார்,
தயாரிப்பு: கி.கரிகாலன்
இசை: முத்தமிழ்
ஒளிப்பதிவு: பாபுகுமார் .
இயக்கம்: வைகறை பாலன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.