Hero Rajkamal & Heroine Manasa starring Sandi Kuthirai Movie Photos. Directed by Anbumathi. Ganja Karuppu, Delhi Ganesh, Risha Arul, Suryakanth, Bondamani, Perumayi in other cast. PRO – Mounam Ravi.
விரைவில் வெளியாகிறது “ சண்டிக்குதிரை “
சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வீரா , பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் – வாரஸ்ரீ.. இவர் பக்தி பாடல்கள் எழுதுவதில் வல்லவர். இதுவரை 6000பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருகிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா “என்ற பாடலும் அடக்கம். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.
கலை – கே.எஸ்.புவனா
நடனம் – தினா, சதீஷ்
ஸ்டன்ட் – டென்ச் ரமேஷ்
எடிட்டிங் – ஜூட் தேடன்ஸ்
இணை இயக்கம் – அருள்
தயாரிப்பு நிர்வாகம் – என்.எ.நாதன்
இணை தயாரிப்பு – பி.பிரகாசம்
தயாரிப்பு – சன்மூன் கம்பெனி
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அன்புமதியிடம் பேசியபோது…இன்றைய நவீன யுகத்தில் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ்ந்து விட முடியும். ஆனால் சில மணி நேரம் கூட மொபைல் போன் இல்லாமல் பெரும்பாலானவர்களால் சமாளிக்க முடியாது அந்தளவுக்கு மொபைல் போன் அவசியமாகி விட்டது.
அதிலும் செல்பி என்னும் மாயை எவ்வளவு பாடாய் படுத்துகிறது. அந்த செல்பி மோகத்தால் ஒரு இளம் ஜோடிக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது. அந்த பாதிப்பின் வீரியம் அவர்களின் வாழ்க்கையை எந்தளவு பாதித்தது என்பதை சொல்லி இருக்கிறோம்.
விஞ்ஞானம் எந்தளவுக்கு உதவிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு விபரீதமானதாகவும் உள்ளது என்பது இந்தக் கதையின் முக்கியக் கரு. படம் நிச்சயம் எலோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார் இயக்குனர் அன்புமதி.
Leave a Reply