நெசவு ஆலை நிறுவனம் நடத்தி வருபவர் மாரிமுத்து இந்நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கருணாஸ் ஆலையில் நடக்கும் விபத்து ஒன்றில், பெண் ஒருவர் தன்னுடைய கையை இழக்கிறார்.
நஷ்ட ஈடு வழங்காமல் அந்த பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து. மறைமுகமாக, இந்த பிரச்சனையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் செல்கிறார் கருணாஸ். போராடி உரிமைகளை பெற்றுத் தரும் கம்யூனிசத்தைச் சேர்ந்த சமுத்திரக்கனி, அங்குள்ள நெசவுத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
சமுத்திரக்கனி, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈட்டை முறையாக பெற்றுக் கொடுக்கிறார். ஒருகட்டத்தில், பிரச்சனையை சமுத்திரக்கனியிடம் எடுத்துச் சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது. இதனால் முதலாளி மாரிமுத்து கடும்கோபத்திற்கு ஆளாகிறார். மேலும் தனது அண்ணன் மகளை கருணாஸ் காதலிப்பது தெரிய வர இறுதியில் மாரிமுத்து என்ன முடிவு எடுக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை .
சங்கத்தலைவன் படத்தின் கதாநாயகன் கருணாஸ். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பால் மனம் நிறைகிறார். அப்பாவித்தனமான அவரது வீரமும், நெகிழ்ச்சியும் கொண்ட கதாபாத்திரப் படைப்பு அருமை.
மிகச்சரியாக கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், சமுத்திரக்கனி. நாயகிகள் சோனுலக்ஷ்மியும் ரம்யாவும் மிக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தறி ஆலை முதலாளியாக வரும் மாரிமுத்து அந்தக் கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர்ராபர்ட் சற்குணம் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றிருக்கிறது. பின்னனி இசை கதையோடு பயணம் புரிகிறது. ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிகப்பு வெளிச்சத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘உதயம் என்.எச் 4’. இந்தப் படத்தின் இயக்குனர் மணிமாறனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘சங்கத்தலைவன்’.
இந்தப்படத்தை ‘உதய் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் உதயகுமார் – கீதா உதயகுமார் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய ‘கிராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் வெளியிட்டுள்ளார்.
ஊழலும் அதிகாரமும் போராட்டத்தால் அடக்கப்பட வேண்டியவை என்ற கருத்தை விறுவிறுப்பு குறையாமல் பதிவு செய்த மணிமாறனுக்கும்..இன்றைய சூழலில் நமக்குத் தேவையான படத்தைத் தயாரித்துள்ள வெற்றிமாறனுக்கு பாராட்டுக்கள்
மொத்தத்தில் ‘சங்கத்தலைவன்’ நேர்மையானவன்
நடிகர்கள் : சமுத்திரக்கனி,கருணாஸ்
இயக்கம் : மணிமாறன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது
Leave a Reply