Kombu Vatcha Singamda Movie Launch Event Sasikumar, Madonna Sebastian , Director S.R.Prabhakaran, Sasikumar, Soori and other grace the Event.
சசிகுமார் – மடோனா செபாஸ்டியன் நடிக்கும கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு இன்று துவங்கியது
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’
தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது இந்த கூட்டணி.
1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ
படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜீ சுந்தரம் நடனத்தில், மைக்கேல்ராஜ் கலையில், மோகன்ராஜ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில், P.சந்துருவின் தயாரிப்பு மேற்பார்வையில், மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக்கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் SR.பிரபாகரன்.
தயாரிப்பு – இந்தர்குமார்
Leave a Reply