தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அழகான கிராமத்து காதலை பேசும் படமாக உருவாக்கியுள்ளதுதான் சீமத்துரை திரைப்படம்.
கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் நாயகன் கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊரில் உள்ள காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கின்றனர். தெருத்தெருவாக சென்று கருவாடு விற்று மகனை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார் நாயகனின் தாய் விஜி சந்திரசேகர். பக்கதுக்கு ஊரில் செல்வாக்கு உள்ள தலைவரின் வீட்டு மகளாக நடித்துள்ளார் வர்ஷா ( பூரணி ). கீதன் படிக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவி. வர்ஷாவை கண்டதும் காதல் வயப்படுகிறார் கீதன். வர்ஷாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். வர்ஷாவின் அப்பாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முன்னாள் வந்து நிற்பவர் வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன்.அவர் வர்ஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக பெண் கேட்கிறார். அதற்கு வர்ஷாவின் தந்தை மறுக்கவே இருவருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் வர்ஷாவும் கீதனை காதலிக்க, விஷயம் நாயகியின் வீட்டிற்கு தெரிந்து பிரச்சினையாகிறது. இதற்கிடையே வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன், இவர்களுக்கு வில்லனாக மாறுகிறார். இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர், வில்லன் காசிராஜன் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கீதன், துறுதுறு நடிப்பின் மூலம் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளினிற்கு தனி பாராட்டுகள். படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாகவே இருக்கிறது. எளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். கேமராமேன் திருஞானசம்பந்தம், எடிட்டர் வீரசெந்தில் ராஜ் ஆகியோரும் தங்களால் முடிந்த அளவிற்கு உழைப்பை தந்திருக்கிறார்கள். எளிமையான ஒரு கதையை கிராமத்து பின்னணியில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். எனினும் கதைக்கு ஏற்றவாறு திரைக்கதையை முழுமைப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நடிகர்கள் கீதன், வர்ஷா பொலம்மா,விஜி சந்திரசேகர், மகேந்திரன், கயல் வின்சென்ட்
இசை ஜோஸ் பிராங்ளினின்
இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன்
Leave a Reply