Actor Venkatesh & Actress Nayanthara starring Selvi Tamil Movie Stills. Directed by Maruthi and Music composed by Ghibran. Babu Bangaram telugu film is dubbed in tamil titled “Selvi”.. PRO – Mouna Ravi.
வெங்கடேஷ் – நயன்தாரா நடிக்கும் “ செல்வி “
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக தமிழில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12 ம் தேதி இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.
போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் பிரசாத்
இசை – ஜிப்ரான் , எடிட்டிங் – திரிநாத்
பாடல்கள் – கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன் SBI.
இயக்கம் – மாருதி. இவர் ஏற்கனவே 20 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அதில் எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.
இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ்
தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்
வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா.
ARK.ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டோம்…
வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது விழாவில் நாயகன் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றார் ARK.ராஜராஜா.
Leave a Reply