அப்பா – மகன் இருவருக்கிடையே நடக்கும் மோதல்தான் ஷாங்-ஜி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்
நகரும் காடுகளுக்குள் ரகசிய இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கிராமத்தில் உள்ள மக்கள் நேரடியாக கடவுளிடம் தொடர்பு கொண்டு உயிர்காககும் பயிற்சிகள் பெறுகிறார்கள் பத்து மாயாஜால வளையங்களை வைத்து உலகையே ஆட்டிப்படைக்க நினைக்கிறார் தந்தை (வில்லன்) . அந்த கிராமத்துக்கு சென்று அந்த பயிற்சி பெற எண்ணு கிறான். அங்கு செல்லும் போது அவனை வழி மறிக்கிறாள் அந்த கிராமத்து பெண். இருவருக்கும் கடும் மோதல் நடக்கிறது. அப்போது இருவருக்கும் காதலும் பிறக்கிறது. அவளை மணந்து இரண்டு குழந்தைகள் பெறுகிறான் வில்லன். இந்நிலையில் அவன் மனைவியை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கொள்கின்றனர். மனைவியை கொன்றவர்களை பழிவாங்க தன் மகனிடம் சொல்கிறார் தந்தை. அவன் மறுத்து ரகசிய கிராமத்துக்கு சென்று தன் உறவினர்களுடன் தங்குகிறான். கோபம் அடைந்த தந்தை படையுடன் அந்த கிராமத்துக்கு வந்து தாக்குகிறார். ஹீரோ கிராம மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
ஆரம்பத்தில் சற்று ஸ்லோவாக செல்லும் கதை. சிறிது நேரத்தில் பரபரக்கிறது. பேருந்து சண்டை, கட்டிடத்திற்குள் நடக்கும் சண்டை என இரண்டும் கதையை விறுவிறுப்பேற்றுகின்றன.
இரண்டாம் பாதியில் மாயாஜாலமா அல்லது மனிதனின் திறமையா என குழப்பத்தில் கொண்டு சென்று அடுத்த பாகத்திற்கான தொடக்கத்தையும் கொடுத்து முடித்துள்ளனர்.தந்தை-மகன் போட்டியின் மிகவும் சுவாரஸ்யமான கதை எழுதி இயக்கியிருக்கிறார் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
மொத்தத்தில் சாங்-சி அதிரடியான ஆக்ஷன் திரைப்படம்.
படம்: ஷாங் ஜி அண்ட் தி லெஜன்ட் ஆப் தி டென் ரிங்க்ஸ்
நடிப்பு: சிமு லியு, டோனி லி யுங், ஆவாக்வாபினா, பலா சென்,
தயாரிப்பு: கெவின் பைஜ், ஜோநாதன் ஸ்வார்ட்ஸ்,
இயக்கம்: டெஸ்டின் டேனியல் கிரேட்டன்
Leave a Reply