சிவாஜி கணேசன் – வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை டிஜிட்டலில் வெளிவருகிறது.
சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ, பாலாஜி, வி.கே.ராமசாமி ஏ. சகுந்தலா, குமாரி பத்மினி ஸ்ரீதேவி, நாகேஷ், ரமா பிரபா சுகுமாரி, மேஜர் சுந்தர்ராஜன், ஆலம், சி.கே.சரசுவதி, வி.எஸ்.ராகவன். டி.கே.பகவதி. எஸ்.வி.ராமதாஸ், சி.ஆர்.பார்த்திபன், பண்டரிபாய். சாந்தகுமாரி, ஸ்ரீகாந்த், ஆகியோர் நடித்து 45 வருடங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பை பெற்று 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தUடம் வசந்த மாளிகை 29.9.1972 அன்று ரிலீசானது.
திரையிட்ட இடமெல்லாம் மக்களின் வரவேற்பை பெற்ற படமான இதற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
இதில் .
,”யாருக்காக”
“குடி மகனே”
“ஒரு கிண்ணத்தை”
“கலைமகள் கை பொருளே”
“மயக்கமென்ன”
“அடி அம்மா ராசாத்தி ” போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் இடம்பெற்ற படம்.
ராமாநாயுடுவின் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரித்த Uடம். கே.எஸ்.பிரகாஷ் இயக்கத்தையும், ஏ வின்சென்ட் ஒளிப்பதிவையும் கவனித்திருந்தனர். கண்ணதாசன் எழுதிய பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடி இருந்தனர்.
இதை இயக்குனர் வி.சி.குகநாதன் வாங்கி டிஜிட்டலில் மாற்றி கலர் சேர்ப்புகளை சரியாக்கி அதை ராமு மூலம் நாகராஜ் வாங்கி ரிலீஸ் செய்கிறார். அன்றைய காலகட்டத்தில் இலங்கையிலும் அதிக நாட்கள் ஓடிய படமிது.
நவீன தொழில் துப்பத்துடன் மெருகேறி உள்ள வசந்த மாளிகையின் டிரைலர் வெளியீட்டு விழா 29.3.19 வெள்ளி அன்று காலை 9 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் ராம்குமார், பி. சுசீலா, வி.சி.குகநாதன் . ஜெயா குகநாதன் .எஸ் .பி .முத்துராமன். சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
விஜயமுரளி
டைமண்ட் பாபு
ரியாஸ் கே. அகமது
கிளாமர் சத்யா
மேஜர் தாசன்
P.R.0’S








Leave a Reply