அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி. பிள்ளை தயாரித்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோமோல் ஜோஸ்,உள்ளிட்டோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றி படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் பிள்ளைகள். உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தது மாதிரி வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார். சித்தார்த் உச்ச பட்சமாக வெறுக்கிறார். அவர் மீது மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வருகிறார். இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது.
இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே மீதிக்கதை.
ஜி.வி. பிரகாஷ் சூப்பராக நடித்திருக்கிறார். குறிப்பாக வன்மத்தை காட்டும் இடத்தில் சும்மா பின்னி எடுக்கிறார். லிஜோ மோல் இனிமேல் வரும் பல தமிழ்திரைப்படங்களில் பார்க்கலாம். அந்தளவுக்கு அக்காவாகவே வாழ்ந்து காட்டுகிறார். சித்தார்த், நான் தமிழ் சினிமாவில் இருக்கேன் என்பதை அடிச்சு நிரூபிக்கிறார். கம்பீரம், பொறுமை, காதல் என கலந்து கட்டி அடிக்கிறார்.
படத்திற்கு வலுசேர்க்கும் இசை மற்றும் ஒளிப்பதிவு. பிச்சைக்காரன் என்ற மெகாஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் சசி, அடுத்த என்ன விஷயத்தை கையிலெடுப்பார் என எதிர்ப்பாத்த நிலையில், மீண்டும் உறவை மையமாக வைத்து குடும்பகளை கவரும், அதே நேரம் இளைங்கர்களுக்கும் சென்றடையும் படமாகவும் உருவாக்கியுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் வசனங்கள் ஆழமாகவும், சிந்திக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதில் மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. முதல் பாதி காமெடியுடனும், இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார்.
அக்கா – தம்பி மற்றும் மாமன் – மச்சான் போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை அழகான திரைக்கதையில் குடும்பங்கள் ரசிக்கும்படி உரக்கசொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.
நடிகர்கள் : சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜமோல் ஜோஸ்,
இசை : ஜித்துகுமார்
இயக்கம் : சசி
தயாரிப்பு : அபிஷேக் பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்
Leave a Reply