Srikanth, Namitha Launched Birangi Puram Movie First Look Motion Poster

Birangi Puram Movie First Look Motion Poster Launch Event held At RKV Studio,Chennai.

வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் தான் சினிமா என்ற நிலை மாறி
சினிமாவிலும் பல பரிசோதனை முயற்சிகள் நடக்கின்றன. அதிலும் சமீபகாலமாக
தென் இந்திய மொழி சினிமாக்களில் படையெடுக்கும் நவீன இளைஞர்கள் சினிமா
மொழியையே மாற்றும் அளவுக்கு சாதிக்கின்றனர். மலையாளம், தமிழ் போலவே
கன்னடத்திலும் அதுபோன்ற புது முயற்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அப்படி ஒரு புது முயற்சியாக இதுவரை தமிழில் அதிகம் வெளிவராத ரோட்மூவி
எனப்படும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது ‘பீரங்கிபுரம்’. இந்த
படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜான் ஜானி ஜனார்த்தனா. இவர்
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்த திருத்தணியில் தான்.
தமிழின் மூத்த இயக்குனர்களையே ரோல்மாடலாக கொண்டு களம் இறங்கியிருக்கும்
ஜான் ஜானி ஜனார்த்தனாவுக்கு தமிழ் சினிமா மீதுதான் தீவிர காதல்.

‘பீரங்கிபுரம்’ என்கிற இத்திரைப்படம் (Road Side film) நெடுஞ்சாலை
வழியாக செல்லும் கதை. சென்னையிலிருந்து ராஜஸ்தான் வரை செல்லும் பயணத்தில்
வாழ்க்கை என்றால் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் விதமாக திரைக்கதை
அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ராஜஸ்தான் மற்றும்
பாலைவனப் பகுதிகளில் திரைக்கதை நகர்கிறது. உலக சினிமாவில் டாட்டூவை
மையப்படுத்தி எடுக்கும் முதல் திரைப்படம். இப்படத்தில் நடிக்கும் முக்கிய
கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மேடை நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள்
(Professional Theatre Artists).
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்
(National Award winner for Best Actor-2015). கடந்த ஆண்டு சிறந்த
நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். இவருக்கு இதுவே முதல் தமிழ் படம்.
கடந்த ஆண்டு நானு அவனுள்ள அவளு என்ற கன்னட படத்தில் பாண்டிச்சேரியை
சேர்ந்த ஒரு திருநங்கையாக நடித்து இந்திய அளவில் பாராட்டுகளையும்,
விருதுகளையும் குவித்தவர் சஞ்சாரி விஜய். தேசிய விருது வாங்கியபோதே
தமிழில் நடிக்க ஆசை என்று சொன்னவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது
‘பீரங்கிபுரம்’
இப்படத்தில் இவருக்கான கதாப்பாத்திரத்தின் தோற்றத்திற்காக மேக்கப்பிற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முப்பதுகளில் இருக்கும் இளைஞனான
சஞ்சாரி விஜய் இந்த படத்தில் ஏற்றிருப்பது வயதான முதியவர் வேடம்.
புது விதமான கதை அம்சத்துடன் இத்திரைப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய
மூன்று மொழிகளில் தயாராகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்கள்.

Technicians:
1.ஔிப்பதிவு-அத்வைத்தா குருமூர்த்தி

2. மேக்கப் – உமா மகேஷ்வர்

3.இசை-ஸ்யாம் L ராஜ்

4. காஸ்டிங் இயக்குனர் -சுகுமார்

5.கதை,திரைக்கதை,இயக்கம்-ஜான் ஜானி ஜனார்த்தனா

6.துணை இயக்குனர்-சரவணவேல், பிரமோத்

7.கலை-செல்லபதி

8.சண்டை-கவி

9.உடைகள்-நிகாரிக்கா

நடிகர்கள்:
1.சஞ்சாரி விஜய்,(2015-National Award Winner for Best Actor)

2.சுகுமார்,

3.சந்திரகலா மோகன்,

4.ராணா,

5.கிரிஷ் ஜத்தி,

6.கோபால் தேஷ்பாண்டே,

7.ஜெய்கார்,

8.கானவி.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.