வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் சிவா நடிப்பில் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில்  மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த்,யோஷினோரி தாஷிரோ, விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சுமோ’

சென்னை கடற்கரை ஓரத்தில் விடிவி கணேஷ் நடத்தி வரும் உணவகத்தில் மிர்ச்சி சிவா வேலை பார்த்து வருகிறார். இவர் அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டில் சிறந்தவராக இருக்கிறார் மிர்ச்சி சிவா – ப்ரியா ஆனந்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் பயிற்சி பெற கடற்கரைக்கு வரும் போது, அங்கு யோஷினோரி தாஷிரோ (ஜப்பான் சுமோ மல்யுத்த விளையாட்டு வீரர்) மயங்கி நிலையில் இருக்கிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார்.

இதனையடுத்து யோஷினோரி தாஷிரோ தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுவதோடு சிறு குழந்தை போல நடந்து கொள்கிறார். சிவா, யோஷினோரியை தன்னுடனே வைத்து பாதுகாத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் யோஷினோரியைப் பற்றிய தகவல் சிவாவிற்கு கிடைக்கிறது. யோஷினோரி ஜப்பானில் மிகப்பெரும் சுமோ மல்யுத்த வீரர் எனவும், அவரை ஒரு கும்பல் கொலை செய்ய தேடிக் தேடிக்கொண்டிருந்தது என்பதை அறிந்து சிவா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த எதிர்ப்பை மீறி யோஷினோரியை மீண்டும் சுமோ போட்டியில் கலந்து கொள்ள வைக்க வேண்டி ஜப்பானுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் சிவா இறுதியில் நாயகன் சிவா யோஷினோரியை ஜப்பானுக்கு அழைத்து சென்றாரா ? இல்லையா? சுமோ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்தாரா? இல்லையா? என்பதே ’சுமோ’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சிவா அலைச் சறுக்கு விளையாட்டு வீரராக வருகிறார். தனது வழக்கமான பாணியில் நடை, உடை பேச்சு என நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த் அழகாக வந்து கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும் காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் சிரிப்பு வரவில்லை.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்கும் ரகம். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

சுமோ மல்யுத்த வீரரை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமின் இத்திரைப்படத்தில் கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ’சுமோ’ சுமார்

மதிப்பீடு : 2.5/5

நடிகர்கள்: மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ்,
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
இயக்கம்: எஸ்.பி. ஹோசிமின்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது

Leave a Reply

Your email address will not be published.