2011ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபஹத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் எதை பற்றி பேசுகிறது? கடவுள்? காதல்? காமம்? உறவு? இல்லை, அது வாழ்க்கையை பேசுகிறது.
சமந்தா தன் கணவனுக்கு தெரியாமல் தன் பழைய காதலுடன் உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.
5 சிறுவர்கள் ஆபாச படம் பார்கும்போது அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா ரம்யா கிருஷ்ணன் வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.
விஜய் சேதுபதி தனது மனைவி மகனை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, திருநங்கையாக மாறிவரும் ஷில்பாவை இந்த சமுக ஒதுக்கி கிண்டல் செய்கிறது.
ரம்யா கிருஷ்ணன் கணவராக வரும் மிஸ்கின் கதாபாத்திரமும் முக்கியதுவம் வாய்ந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்விக்கு மிஸ்கின் மூல அழுத்தமான கருத்தை கூறியுள்ளார் இயக்குனர் தியாகராஜ குமாரராஜா.
இந்த உலகத்தில்நடக்கும் ஒவ்வொரு நல்லதுக்கு ஒவ்வொரு கேட்டதுக்கு தொடர்பு இருக்கிறது என்று இத்தனை கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் கூறியுள்ளார்.
காட்சிகளுக்கு ஏற்ற வசனங்கள் மூலமாவும் கதை நகர்த்தப்படுகிறது. அதிலும் நான்கு பிரதான கதாபாத்திரங்கள் வெவ்வேறு தருணங்களில் பேசும் பின்வரும் வசனங்கள் அந்தக் கதாபாத்திரங்களின் கதையைச் சொல்வதோடு இயக்குநர் சொல்ல விழைந்த கருத்துக்கும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.
படத்துக்கு மிகப்பெரிய பலம், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. 3 மணி நேரப் படத்தை, பொறுமையுடன், சுவாரசியமாகக் கொண்டுசெல்ல யுவன்தான் மிக முக்கியமான காரணம். நிசப்தமான காட்சிகளில் கூட, எங்கோ இருந்து ஒரு பாடலையோ, சப்தத்தையோ ஒலிக்கவிட்டு, அந்தக் காட்சியின் இயல்புத்தன்மையை உணர்த்துகிறார்.
தியாகராஜன் குமாரராஜா எழுதிய கதைக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு காட்சிக்கும் மிகக் கடுமையாக உழைத்து, சின்னச் சின்ன விஷயங்களில் கூட டீட்டெய்ல்ஸ் சேர்த்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், பகவதி பெருமாள், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவன், பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் தவிர, சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஒருவர் நன்றாக நடித்திருக்கிறார், இன்னொருவர் சிறப்பாக நடிக்கவில்லை என்று யாரையுமே குற்றம் சொல்ல முடியாத அளவுக்குத் தங்கள் கதாபாத்திரங்களின் நிலை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அபாரம்.
இப்படத்தில் நடித்த அனைவரும் தனது 100% நடிப்பை காட்டியுள்ளார்கள், மோசமான போலீஸ் அதிகாரியாக வரும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி
நடிகை சமந்தா
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா
இசை யுவன் ஷங்கர் ராஜா
ஓளிப்பதிவு நிரவ் ஷா, பி.எஸ்.வினோத்
மக்கள் தொடர்பு நிகில்
Leave a Reply