24 Movie Audio Launch event held at Sathyam Cinemas, Chennai. April 11th 2016.Suriya, Nithya Menon, Vikram Kumar, AR Rahman, Haricharan, Benny Dayal, Shashwat Singh, Arijit Singh, Chinmayi, Sid Sriram, Sanah Moidutty, Jonita Gandhi, Shashaa Tirupati, Shakthisree Gopalan, Hriday Gattani, Velraj, Hari, Madhan Karky, Parvathy Nair, Sivakumar, Karthi, KE Gnanavel Raja graced the event.
விழாவில் நடிகர் சூர்யா பேசியது , படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்ப்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது எனலாம். வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள் தான். “ சரியான படம் பண்ணின வெற்றி பெற வைங்க , தப்பான படத்தை நான் பண்ணினா கூட என்னையும் ஆதரிக்காதிங்க , அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால் தான் நாங்கள் நல்ல கதையை தேடி பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும் , உங்களை மகிழ்விக்கவும் முடியும். இயக்குநர் விக்ரம் குமார் மிகச் சிறந்த இயக்குநர் , அவர் படத்தின் கதையை நான்கு மணி நேரம் என்னிடம் கூறி முடித்ததும் நான் கை தட்டி ரசித்தேன். படத்தின் கதையை கேட்க்க வேண்டும் என்று இசைய்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் நான் கூறியதும் , முதலில் அரைமணி நேரம் கதை கேட்க்க நேரம் ஒதுக்கிய இசை புயல் பின்னர் கதை பிடித்து போய் ஆறு மணி நேரம் கேட்டார். இப்படம் ஒரு லட்சிய படைப்பு என்று இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கதையை விவரித்து முடித்தவுடன் என்னிடம் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் அவர் மிகப்பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார். சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டத்தை பற்றி நான் தெரிந்து கொண்டதும் நான் மிகவும் வருந்தினேன் , மனசு வலித்தது , எல்லாருக்கும் நேரம் இருக்கு , எல்லாருக்கும் நேரம் வரும். கல்லூரி படிக்கும் போது நானும் எதுவும் செய்யமால் இருந்தேன் , ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் காரணம். இப்படத்தில் நான் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன்.
விழாவில் ஞானவேல் ராஜா பேசியது ; நான் சமீபத்தில் கேட்ட கதைகளிலேயே இப்படத்தின் கதை தான் மிகசிறந்தது எனலாம் , நான் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். 2 டி யும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இனைந்து தற்போது மிகச்சிறந்த பிரம்மாண்ட படைப்பை வெளிக்கொண்டுள்ளது என்றார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது ; நான் இப்படத்தில் இன்னும் பணியாற்றிக்கொண்டு இருப்பதால் என்னால் இப்படத்தை பற்றி பேச இயலாது. உங்கள் ஆதரவுக்கு நன்றி என்றார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
சூரியா சமந்தா , நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் k குமார் இயக்கத்தில் வெளிவரயுள்ள 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் சூர்யா , இயக்குனர் விக்ரம் குமார் , இசைப்புயல் A.R.ரகுமான், ஞானவேல் ராஜா , நித்யா மேனன் , சிவக்குமார் , கார்த்தி . கவிபேரரசு வைரமுத்து , சரண்யா பொன்வண்ணன் ,மதன் கார்க்கி .சின்மயி , இயக்குனர் ஹரி உள்ளிட்ட மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர் …
விழாவில் இசைப்புயல் A.R. ரகுமான் இசையில் நித்யா மேனன் 24 படப் பாடலை தெலுங்கில் பாடினார்..இப்பாடல் அரங்கத்தில் இருந்தவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது..
Leave a Reply