எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி.

63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த துணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரனை படத்திற்க்காக கிடைத்துள்ளது.

எனக்கு இவ்விருது கிடைக்க உருதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், விசாரனை படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

விசாரனை படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு விசாரனை படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விசாரனை படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்.

எனது அடுத்த படைப்பான “அப்பா” விரைவில் வெளிவரவுள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.