ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கத்தில் பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தரைப்படை’

சென்னையில் சிட் ஃபண்ட் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்த ரூ.1000 கோடி மதிப்பிலான பணத்தை அந்த நிறுவனத்தின் தலைவர் தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் ஒரு பெட்டியில் வைத்திருக்கிறார்.

அந்த பெட்டி  வைத்திருக்கும் நபரை பிரஜின் துப்பாக்கியால் சுட்டுவிட்டு பெட்டியை எடுத்து செல்கிறார். அங்கு வரும் ஜீவா அந்த நபரை காப்பாற்றுகிறார். மறுபக்கம் பணத்திற்காக கடத்தல் மற்றும் கொலை  செய்பவர்  விஜய் விஷ்வா ஒரு சந்தர்ப்பத்தில் பிரஜினிடம் இருக்கும் பெட்டியை எடுத்துச் செல்கிறார்.

இந்நிலையில் விஜய் விஷ்வாவிடம் இருக்கும் பெட்டியை ஜீவா எடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா இவர்களில் பெட்டியை கைப்பற்றியது யார்?  எதற்காக? ஜீவா சிட் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவரை காப்பாற்ற காரணம்  என்ன? என்பதே ’தரைப்படை’  படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் அதிரடி நாயகனாக வலம் வருகிறார்.கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.  ஜீவா இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். நடை ,  பேச்சு , ஸ்டைல், சிகரெட் புகைப்பது என அனைத்திலும் ரஜினியை போல செய்திருக்கிறார்.

வில்லனாக மிரட்டியிருக்கும் விஜய் விஷ்வா, குட்டி, புட்டி என படம் முழுவதும் ஜாலியாக இருக்கிறார். கொஞ்சம்  நடிக்கவும் செய்திருக்கிறார்.படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும்  கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு படத்திற்கும் மிகப்பெரிய பலமாக உள்ளது.

வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் . என்பதை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள ஆக்ஷன்  திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்  ராம்பிரபா

இப்படத்தில் ஹீரோ யார்?, வில்லன் யார் ? என்பதை யூகிக்க முடியாதபடி வித்தியாசமான வகையில் கதாபாத்திரங்களையும், அவர்களது செயல்களையும் வடிவமைத்திருக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘தரைப்படை’ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மொத்தத்தில் ’தரைப்படை’  போட்டி

மதிப்பீடு : 3/5

நடிகர்கள் : பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல்
இசை : மனோஜ்குமார் பாபு
இயக்கம் : ராம்பிரபா
மக்கள் தொடர்பு : நிதிஷ்

Leave a Reply

Your email address will not be published.