ஆஸிப் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் வசி ஆஸிப் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் வசி, பூஜாஸ்ரீ , சீமான், போஸ்வெங்கட், சிங்கம்புலி, சந்தானபாரதி, பிளாக் பாண்டி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “தவம்”

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்கான காரணமாக தனது காதல் கதை பிளாஷ்பேக்கை சொல்ல, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார் அங்கு A டூ Z என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். அந்த ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் வில்லன் விஜய் ஆனந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார்.

இந்நிலையில் வசியின் தந்தையும் அந்த ஊரின் விவசாய போராளியுமான சீமான் மகன் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. சீமான் கொல்லப்பட என்ன காரணம்? சீமான், தன் மகனிடம் ஒரு சத்யம் வாங்குகிறார். அந்தச் சத்தியத்தை மகன் நிறைவேற்றினாரா? பூஜாஸ்ரீ – வாசி காதல் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை

நாயகன் வசி, கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்களோடும் இருக்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.நடேசன் வாத்தியார் பாத்திரத்தில் வருகிற சீமான், படத்துக்குப் பலமாக இருக்கிறார்.அவர் வருகிற காட்சிகள் வேகமாகப் போகின்றன. சமுதாய அக்கறையோடு அவர் பேசும் வசனங்கள் வரவேற்புக்குரியவை. பூஜாஸ்ரீ, நடிப்பு மட்டும் இன்றி, கமர்ஷியல் நாயகிக்கு உண்டான அம்சத்தோடு வலம் வருகிறார். வெறுமனே காதலுக்காக மட்டும் பயணிக்காமல் கதையுடனும் பயணித்திருக்கும் நாயகியின் நடிப்பும் ஓகே தான். சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள்.

படத்தின் இயக்குநர்கள் விஜயானந்த் சூரியன் ஆகிய இருவரும் படம் முழுக்க வருகிற வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகன் வசியின் மாமாவாக சூர்யனும், வில்லன் சிவண்ணாவாக விஜயானந்தும் நடித்திருக்கிறார்கள். வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.

காதல் கதையாக இருந்தாலும், சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன், விவசாயம் குறித்து பேசியிருக்கும் அத்தனையும் எதிர்கால தலைமுறைக்கானதாக இருக்கிறது. நல்ல கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் பலவீனமாக இருக்கிறது

நடிகர்கள் : வசி, பூஜாஸ்ரீ , சீமான், போஸ்வெங்கட், சிங்கம்புலி, சந்தானபாரதி, பிளாக் பாண்டி
இசை : ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம் : ஆர். விஜயானந்த், ஏ.ஆர். சூரியன்
தயாரிப்பு :ஆஸிப் பிலிம் இன்டர்நேசனல்

Leave a Reply

Your email address will not be published.