BVSN.பிரசாத் தயாரிப்பில் அனி ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தீனி’

லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் தலைமை சமையல் நிபுணராக இருப்பவர் நாசர் இவருடைய மனைவி மற்றும் மகள் இவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார்கள் அதே ஓட்டலுக்கு வேலைக்கு வருபவர் அசோக் செல்வன் இவர் ஒரு விதமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் இதே ஓட்டலில் பணிபுரிபவர் ரித்து வர்மா உணவின் வாசனையை வைத்தே உணவின் தரத்தை கணித்து சொல்லி விடுவார் நாசர்.

ஒரு நாள் சமையல் நிபுணர் செய்த உணவில் குறையிருப்பதை அறியும் நாசர், அசோக் செல்வனிடம் சரிசெய்ய சொல்லுகிறார். அந்த குறையை சரிசெய்கிறார் அசோக் செல்வன் இதன் மூலம் அனைவரின் பாராட்டுகளை பெறுகிறார். கிறித்துமஸ் தினத்தில் எதிர்பாராத விதமாக சமையல் பொருட்கள் இருக்கும் சேமிப்பு கிடங்கில் அசோக் செல்வன், ரித்து வர்மா மாட்டிக்கொள்கிறார்கள். இறுதியில் சமையல் கிடங்கிலிருந்து தப்பித்தார்களா ? இல்லையா ? நாசரின் மகள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அதிக உடல் எடை, பரட்டை தலை முடி, அடர்த்தியான தாடி மற்றும் ஒருவித மனா அழுத்த பிரச்சனையோடு வலம் வரும் அசோக் செல்வன் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும், படத்தின் துவக்கத்திலேயே படத்தோடு நம்மை பயணிக்க செய்துவிடுகிறது. இளம் வயதில் தோழியிடம் நட்பு அவள் பிரிவால் வாடுவது என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து. நடித்தித்திருக்கிறார்.

அழகிலும், நடிப்பிலும் எளிமையோடு வலம் வருகிறார் ரித்து வர்மா, நித்யா மேனன் தனது துள்ளல் நடிப்பின் மூலம் அனைவரையும் கவருகிறார். தலைமை சமையல் நிபுணராக நடித்திருக்கும் நாசர் தனது அனுபவ நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெறுகிறார்.

4 கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் படு சுவாரஸ்யமாக நகர்வதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையோடு நம்மையும் பயணிக்க வைக்க, ஓளிப்பதிவாளர் திவாகர் மணி, லண்டன் குளிரை உணரச் செய்கிறார்.

தெலுங்குப் படத்தின் டப்பிங் என்று சொல்கிறார்கள். ஆனால், நமக்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு எந்த இடத்திலும் ஏற்படாத வகையில் காட்சிகளும், நடிகர்களின் நடிப்பும் அமைந்திருக்கிறது. படத்தின் காட்சிகளை மெல்ல நகர்த்தினாலும், அதை ரசிக்கும்படியான யுக்திகளை திறப்பட கையாண்டிருப்பதோடு, காதலை சொல்வதில் கூட கண்ணியத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் அனி ஐ.வி.சசி பெரும் பாராட்டுக்குரியவர்.

மொத்தத்தில் ‘தீனி’அனைவரும் விரும்பும் அற்புதமான படம்.

நடிகர்கள் : அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன், நாசர்
இசை : ராஜேஷ் முருகேசன்
இயக்கம் : அனி ஐ.வி.சசி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.