உஷா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ், மோனிகா சின்னகொட்லா,சீதா, பாலசரவணன் ஆகியோர் நாட்டில் வெளியாகி இருக்கும் ” தொட்டுவிடும்தூரம் “

கிராமத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன் விவேக்ராஜ் , தாயார் சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.

நாயகிக்கு ஏற்படும் பிரச்சனையில் இருந்து நாயகன் காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் காதலித்து வரும் சூழலில், நாயகி கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது. பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் காதலர்கள் மீண்டும் சந்தித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார். அம்மாவாக சீதா, அவ்வளவு பாசமானவராக அவரைக் காட்டியிருக்கிறார்கள். பாலசரவணன் ஓரிரு காட்சிகளில் வந்ததோடு சரி.அறிமுக இசையமைப்பாளர் நோவா இசையில் சில பாடல்கள் கேட்கும் ரகம். ராம் குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

நடிகர் விவேக்ராஜ்
நடிகை மோனிகா சின்னகோட்ளா
இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன்
இசை நோகா பிரவீன் இமானுவேல்

Leave a Reply

Your email address will not be published.