ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் எழுத்தாளரும்கூட. இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’.

சென்னையில் வீடு தேடி அலையும் ஒரு குடும்பம் சந்திக்கும் துயரத்தை அடிப்படையாக வைத்து டூ லெட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 100க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 32 விருதுகளையும், 84 பரிந்துரைகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

குறிப்பாக டூ லெட் படம் கடந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல் என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த மூவரும் என்ன செய்கிறார்கள், எங்கே அவர்களுக்கு வீடு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனுக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி, அந்த துயரத்திலும் போராடும் மனவலிமை இவை யாவையும் ஒருசேர மக்களுக்கு சொல்லும் படமே டூலெட். படத்தின் நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம் கதாப்பாத்திரத்திற்கு சிறந்த தேர்வு தனக்கான பங்கை சரிவர நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள். கதாநாயகியாக சுசீலா நடித்துள்ளார் அவர் ஒரு எளிமையான குடும்பப்பெண்னின் ஆசை, கோவம், கொஞ்சல், ஏமாற்றம் என தன் திறமையை மக்களுக்கு தன் நடிப்பால் நிரூபித்து காட்டி இருக்கிறார். இவர்களுக்கு மகனாக நடித்துள்ள தருண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முழுப்படத்திலும் தனக்கான காட்சிகளை சிறப்பாக கையாண்டு இத்தகைய இறுக்கமான கதைசொல்லும் படத்தில் கதையை குழப்பாமல் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தியதற்காக கூடுதல் பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் அவர் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

படத்தின் கதை நகர்தல் எந்த தொய்வும் இல்லாமல் இந்த படைப்பை மக்களுக்கானதாகவும் எளிமையானதாகவும் கொண்டுவந்த இயக்குனருக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். படத்தின் கூடுதல் சிறப்பாக இசை வடிவமைப்பாளர் தபஸ் நாயக் அவர்களுக்கு தான் அனைத்து நல்ல வரவேற்புகளும் போய்சேரும் காரணம் படத்தில் வரும் அத்தணை இசையும் மிக துல்லியமானதாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபழிக்கும் படங்களில் இசை வடிவமைப்பு மிக துல்லியமாக இருந்தால்தான் படத்தோடு மக்கள் ஒன்றி பார்க்கமுடியும். படத்தொகுப்பில் ஸ்ரீகர் பிரசாத் கனக்கச்சிதமாக படத்திற்கு தேவையானதை மட்டும் வைத்து படத்தை தூக்கிபிடித்திருக்கிறார். மொத்தத்தில் டூலெட் போன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் இத்தகைய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக உள்ளது.

நடிகர் சந்தோஷ் ஸ்ரீராம்
நடிகை ஷீலா ராஜ்குமார்
இயக்குனர் செழியன்
இசை தபஸ் நாயக்
ஓளிப்பதிவு செழியன்
மக்கள் தொடர்பாளர் ஜான்

Leave a Reply

Your email address will not be published.