கன்னட சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கிறவர் தான் சுனில் குமார் தேசாயி. சஸ்பேன்ஸ் படங்களை இயக்கும் இவர் உச்சக்கட்டம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சிங்கம் 3 படத்தில் வில்லனா நடித்த தாகூர் அனூப் சிங் ஹீரோவா நடிச்சிருக்கும் இந்த படத்தில் சாய் தன்ஷிகா, கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கும் கொலையை தொடர்ந்து நடைபெறும் மர்மமான நிகழ்வுகள் தான் உச்சக்கட்டம் படத்தின் கதை .

காதலர்களான தாகூர் அனூப் சிங்கும், சாய் தன்ஷிகாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அறையில் ஒரு மனிதர் கொல்லப்படுகிறார். அதனை சாய் தன்ஷிகா எதார்த்தமாக வீடியோ எடுத்துவிடுகிறார். இதையடுத்து சாய் தன்ஷிகாவை வில்லன் கும்பல் துரத்துகிறது. ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்கிறார் சாய் தன்ஷிகா, வில்லன் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் தாகூர், தன்யோ ஹோப்பின் உதவியுடன் காதலியை தேடி செல்கிறார். இவர்கள் அனைவரும் குடகு மலை காட்டுப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். வில்லன் கும்பலிடம் தன்ஷிகா சிக்கிக்கொள்கிறார். ஹோட்டலில் கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார், ஆதித்யாவால் தனது காதலியையும் தனக்கு உதவிசெய்ய வந்த பெண்ணையும் காப்பாற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஆதித்யாவாக வரும் தாகூர் அனூப் சிங் அதிரடி சண்டைக்காட்சிகளில் நம்மை கவர்கிறார். படம் முழுவதும் கொலை கும்பலிடமிருந்து தப்பிப்பது, அவர்களிடம் சிக்குவது என மாறி மாறி தனது முழு சக்தியையும் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார் ராஷ்மியாக நடித்துள்ள தன்ஷிகா.

உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கரீஷ்மாவாக நடித்துள்ள தான்யா போப்பிற்கு இடைவேளைக்கு பின்பு நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரு சில காட்சிகள் வந்தாலும், அதிகமாக ஸ்கோர் செய்கிறார் ஆடுகளம் கிஷோர்,. வம்சி, கபூர் சிங், ஷ்ரத்தா தாஸ் என படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிருக்கும் இந்த படத்துக்கு சஞ்ஜாய் சௌத்ரி இசையமைக்க, டி கிரியேஷன் சார்பில் தேவராஜன் தயாரித்துள்ளார்.

மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த படம்

.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.