ட்ரூ சோல் பிக்சர் சார்பில் ரூபேஷ்குமார் தயாரிப்பில் டாவின்சி சரவணன் இயக்கத்தில் ராகவ், லூதியா, திவ்யன் , RNR.மனோகர், சபீதா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘வி ’

பெங்களூரில் வசிக்கும் கதாநாயகன் ராகவ் , கதாநாயகி லூதியா, மற்றும் இவர்களுடைய நண்பகள் சேர்ந்து பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள்.கதாநாயகி தனது நண்பர் ஒருவர் உருவாக்கி இருக்கும் செயலி பற்றி உடன் இருக்கும் அனைவருக்கும் சொல்லுகிறார். அது என்னவென்றால் யாருடைய பிறந்த தேதியையும் அந்த செயலியில் பதிவிட்டால் அவர்கள் இறக்கும் தேதி தெரிந்தது விடும் இவர்கள் அனைவரும் அவரவர் பிறந்த தேதியை பதிவிட அவர்கள் அனைவரும் ஒரே தேதியில் இருப்பதாக வருகிறது. கதாநாயகியை தவிர மற்றவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து செல்லும் நண்பர்கள் வழியில் லாரியுடன் பைக் ரேசில் ஈடுபடுகிறார்கள். இதில் ராகவ் வெற்றி அடைகிறார். இதனால் லாரி ஒட்டி வந்தவர் இவர்களை எப்படியாவது லாரியில் மோதி கொலை செய்ய நினைக்கிறான் இவர்கள் மீது லாரியை ஏற்ற நினைக்கும் டிவைவரிடம் இருந்து தப்பிக்கும் இவர்கள் இரவு நேரம் என்பதால் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கும் விடுதியில் தங்குகிறார்கள். அங்கு தங்கி இருக்கும். கதாநாயகி திடீர் என மர்மமான முறையில் இறக்கிறாள். இவரை தொடர்ந்து இவர்களுடன் வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடையும் ராகவ் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா இல்லையா ? கொலைக்கான பின்ணணி என்ன என்பதே ‘வி ’படத்தின் மீதிக்கதை .

கதாநாயகன் ராகவ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பைக் ரேஸாக இருக்கட்டும் நண்பர்களை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சியாக இருக்கட்டும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகி லூதியா பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். கதாநாயகியின் தாய், தந்தையாக நடித்திருக்கும் RNR.மனோகர், சபீதா ஆனந்த் இவர்களுடைய அனுபவ நடிப்பு படத்திற்கு கிடைத்திருக்கும் பலம்.

இசையமைப்பாளர் இளங்கோ கலைவாணன் இசையில் ” எக்கச்சக்க இன்பம் ” பாடல் துள்ளல் போட வைக்கிறது . சஸ்பென்ஸ் திரில்லர் படத்திக்கு பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பார்ப்பவர்களுக்கு அழகாவும் இரவு காட்சிகளை அற்புதமாக படம் பிடித்து இருகிறார் ஒளிப்பதிவாளர் அணில் கே.சாமி

இயக்குனர் டாவின்சி சரவணன் தனது முதல் படத்தை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்து இருக்கிறார். சமூகத்திற்கு தேவையான பதிவை மிக துணிச்சலோடு சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. பெண் குழந்தைகளை பாதுகாக்கப்பட வேண்டியதை சஸ்பென்ஸ் திரில்லர் நிறைத்த கதை களத்தில் சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘வி ’ வெற்றியை நோக்கி ஒரு பயணம்

‘வி ’

நடிகர்கள் : ராகவ் , லூதியா , RNR.மனோகர், சபீதா ஆனந்த்

இசை : இளங்கோகலைவாணன்

இயக்கம் : டாவின்சி சரவணன்

தயாரிப்பு : ரூபேஷ்குமார்

மக்கள்தொடர்பு : விஜய முரளி , கிளாமர் சத்யா

Leave a Reply

Your email address will not be published.