’மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’, ‘வட சென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாராட்டு பெற்ற பவல் நவகீதன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியாகி இருக்கும் ‘வி1′ (V1

‘லிவிங் டு கெதர்’ முறையில் இருக்கும் லிஜேஷ் உடன் வசிக்கும் காயத்ரி வீட்டிற்கு வரும் வழியில் கொல்லப்படுகிறார்.
.கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகள் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா களம் இறங்குகிறார்கள் போலீஸ் அதிகாரியான ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ, இருட்டை பார்த்தாலே பயப்படும் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருக்க, இதுவே அவர் வழக்கை விரைந்து முடிக்க தடையாக இருக்கிறது.

இதனிடையே லிஜேஷ் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து காயத்ரிக்கு காதல் தொல்லை கொடுத்த லிங்கா, காயத்ரி வீட்டருகில் உள்ள ஒரு இளைஞர், செயின் திருட்டு செய்யும் பணக்கார வீட்டு சிறுவன் போலீஸ் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். உண்மைக் குற்றவாளி யார் என்பதை ராம், விஷ்ணுப்ரியா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுக ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ காவல்துறை அதிகாரியாகவும், தடயவியல் நிபுணராகவும் வருகிறார். அவரது தோற்ற வலு அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறது. ஆனால், அவருக்கு இருக்கும் ‘இருட்டைக் கண்டால் பயம்…’ என்ற ஃபோபியா அவருக்கு பலவீனத்தையும், கதைக்கு பலத்தையும் சேர்க்கிறது. எல்லா விசாரணை அதிகாரிகளையும் போலவே அவருக்கும் ஒருகட்டத்தில் மேலதிகாரிகளிடம் இருந்து விசாரனையில் இருந்து விடுவிக்கப்படும் நெருக்கடி எழ, உண்மைக் குற்றவாளி தப்பித்துவிடக் கூடாதென்ற காவல் உணர்ச்சியுடன் தனக்கெதிரான நடவடிக்கை மற்றும் போபியாவுடன் போராடி எப்படி கடமையைக் காப்பாற்றுகிறார் என்பது தொய்வில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்‌ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மற்ற பாத்திரங்களான காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். படம் தொடங்கியது முதல் முடிவது வரை ஒரு துப்பறியும் நாவலை படித்த அனுபவம் ஏற்படுகிறது.

ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் தங்களது தனித்துவத்தை காட்ட முயற்சிக்காமல், காட்சிகளுடன் பயணித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இயக்குநர் பவல் நவகீதன் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஒரு கொலை, அதன் பின்னணி, என்ற சாதாரண ஒன்லைனாக இருந்தாலும், இயக்குநர் பவல் நவகீதன் அமைத்திருக்கும் திரைக்கதை, யூகிக்க முடியாத சஸ்பென்ஸாக இருக்கிறது. இவர் கொலையாளியாக இருப்பாரோ! என்று நாம் யோசிக்கும் போது, திரைக்கதையில் ஏற்படும் திடீர் ட்விஸ்ட் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.