வசந்த மாளிகை வசூல் மழை | 46 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து திரையிட்ட இடமெல்லாம் வசூலை வாரி குவித்த படம் “வசந்த மாளிகை’

சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, பாலாஜி, ஏ. சகுந்தலா, நாகேஷ், ஹெலன், புஷ்பலதா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சாந்தகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர்.

கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு கே.வி.மகாதேவன் இசையில்
“மயக்கமென்ன…”
“ஏன்.. ஏன்.. ஏன்..”
“இரண்டு மனம் வேண்டும்”
“அடி அம்மா ராசாத்தி . . . “
“குடிமகனே”
“கலைமகள் கை பொருளே “
“யாருக்காக.. . . . “
போன்ற அருமையான பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
இன்று (21.6.19) கே.வி.மகாதேவனின் நினைவு நாள்
அவரது நினைவு நாளான இன்று “வசந்த மாளிகை” படத்தினை டிஜிட்டலில் கலர் சரி பார்த்து தமிழகம் முழுவதும் புத்தம் புதிய படம் போல் வினியோகஸ்தர் வி.நாகராஜா ரிலீஸ் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ” தமிழகம் முழுவதும் படம் மிகப் பெரிய ஓப்பனிங் கிடைச்சிருக்கு சீனுக்கு சீன் கைதட்டல் காதை பிளக்குது. மார்க்கெட்டில் உள்ள இன்றைய ஹீரோக்களுக்கு போட்டியாக சிவாஜியோட வசந்த மாளிகை வசூலில் சாதனைuரியும்னு நம்பிக்கை வந்திருக்கு என்றார்.

Leave a Reply

Your email address will not be published.