சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் கதாபாத்திரங்களுடனும், கூடுதலான ஒரு கதையுடனும் வெளியாகியிருக்கும் படம் ‘வெண்ணிலா கபடி குழு

ஆடியோ கடை கடை நடத்தி வரும் விக்ராந்த் கல்லூரி மாணவி அர்த்தனா பினு மீது கண்டதும் காதல் கொள்கிறார். அவரும் விக்ராந்தை காதலிக்க, காதலுக்கு ஹீரோயின் அப்பாவான ரவி மரியா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

குற்றாலம் அருகில் ஒரு கிராமத்தில் அரசு பஸ் ஓட்டுனராக இருக்கிறார் பசுபதி. கபடி விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வம் கொண்டவர். வேலையை விட்டு கூட எங்கு கபடி நடக்கிறதோ அங்கு சென்றுவிடுவார். தொடர்ந்து அப்படி சென்றதால் வேலையை விட்டு சஸ்பென்ட் செய்யப்படுகிறார். சஸ்பென்ட் ஆகி வீட்டுக்கு வரும் அப்பா பசுபதியை, சற்றே ஏளனமாகப் பேசுகிறார் மகன் விக்ராந்த்.

மகனைக் கண்டிக்கும் அம்மா அனுபமா, பசுபதி யார் என்பதை மகனுக்குப் புரிய வைக்கிறார். திறமையான கபடி விளையாட்டு வீரரான பசுபதி, வீண் பழியால் பழனிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து வெளியேறி குற்றாலத்தில் வந்து செட்டிலாகியுள்ளார். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அப்பாவுக்குத் தெரியாமல், சென்னை செல்வதாகச் சொல்லிவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி பெறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதல்பாதியில் குடும்பம், காதல் என சுற்றி வரும் இளைஞனாகவும், பிற்பாதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தீவிரமாக பயிற்சி எடுத்து கபடி விளையாடுவது என சிறப்பாக நடித்துள்ளார் விக்ராந்த். நாயகிக்கு பெரும் பங்கு இல்லாத போதும், வரும் காட்சிகளில் அழகால் ரசிக்க வைக்கிறார்.ஹீரோயின் அர்த்தனாவுக்கு ஹீரோவை கண்டதும் காதல் கொள்ளும் சாதாரண கமர்ஷியல் ஹீரோயின் வேடம் தான். சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக வரும் பசுபதி எதார்த்தமாக நடித்து மனதில் நிற்கிறார். குறிப்பாக தந்தை மகனுக்கு இடையிலான சென்டிமென்ட் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ரவிமரியா அப்புகுட்டி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்..

இடைவேளைக்குப் பின்னர்தான் சூரி வருகிறார். கிஷோர் வழக்கம் போல அவரது கதாபாத்திரத்தில் நிறைவு.குற்றாலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அழகாக படம் பிடித்திருக்கிறார். சுசீந்திரனின் மூலக்கதையை திரைக்கதை அமைத்து செல்வசேகரன் இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ராந்த்
நடிகை அர்த்தனா
இயக்குனர் செல்வசேகரன்
இசை செல்வகணேஷ்
ஓளிப்பதிவு கிருஷ்ணசாமி

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.