தாய் மூவீஸ் தயாரிப்பில் எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி  இருக்கும் ‘வேட்டை நாய்’

ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவர் ராம்கி இவரிடம் அடியாளாக வேலை செய்தவர் ஆர்கே சுரேஷ் ராம்கி கண்ணசைவு செய்தாலே எதிரிகளை துவம்சம் செய்பவர்  ஆர்கே சுரேஷ்

இவருடைய அத்தை – மாமா  பெண்  பார்ப்பதற்காக கொடைக்கானல்  சொல்கிறார்கள் அங்கு பள்ளியில் படிக்கும் பெண் சுபிக்ஷா பார்த்தவுடன் ஆர்கே சுரேஷுக்கு பிடித்திருக்கிறது பல போராட்டத்திற்கு பிறகு அவரை திருமணம் செய்து கொள்கிறார்

ராம்கியிடம்  அடியாளாக ஆர்கே சுரேஷ் வேலை பார்ப்பது சுபிக்ஷாவிற்கு  பிடிக்கவில்லை அவரை விட்டு விலகி வர சொல்கிறார் திருந்தி வாழ நினைக்கும் ஆர்கே சுரேஷுக்கு முன் பகையால் பல பிரச்சனைகள் வருகிறது அந்த பிரச்சினையை சாமாளித்தாரா ? இல்லையா ”  என்பதே படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர் கே சுரேஷ் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டி எடுத்து மிரட்டி எடுக்கிறார். நாயகி சுபிக்ஷா பள்ளி மாணவியாக இருக்கட்டும் திருமணமான பெண்ணாக வருவதாக இருக்கட்டும் இரண்டையும் நேர்த்தியாக செய்திருக்கிறார்

ராம்கி கதாபாத்திரம் தனது வழக்கமான  நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.  ஈஸ்வரனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது கணேஷ் சந்திரசேகரனின் இசை கேட்பதற்கு இனிமை இயக்குனர் ஜெய்சங்கர் நல்ல திரைப்படமாக  கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்

மொத்தத்தில் ‘வேட்டை நாய்’ பாசமானவன்

நடிகர்கள்  : ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்‌ஷா
இசை   : கணேஷ் சந்திரசேகர்
இயக்கம்  : எஸ்.ஜெய்சங்கர்
மக்கள் தொடபு  : சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.