Thalapathy 60 Movie Launch Event held At Chennai. Vijay, Keerthy Suresh,Satheesh,Music Director – Santhosh Narayanan,Director by Bharadhan and Produced by Vijaya Production. PRO – Riaz Ahamed.
இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது.
எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி EVP ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.
நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்தி’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதிஷ் இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார்.. மற்றும் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள் .முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளையதளபதி விஜய்யுடன் கைகோர்க்கிறார்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்திற்கு எடிட்டிங் பிரவின் கே.எல்.
கலை இயக்குனர் – பிரபாகர்
ஸ்டன்ட் – அனல்அரசு
காஸ்டியூம் டிசைனர் – சத்யா N.J
புராஜெக்ட் ஹெட் – A.ரவிச்சந்திரன்
ஆப்ரேடிங் ஹெட் – குமார்
இன்றும் நாளையும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது
Leave a Reply