விஜய்சேதுபதி நடிக்கும் “றெக்க” படத்தின் போட்டோஷூட் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

விஜய்சேதுபதி நடித்த “ஆரஞ்சு மிட்டாய்” படத்தை தயாரித்த

common man presents B.கணேஷ், அடுத்ததாக மிக பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கும் படம் “றெக்க”.விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை “வா டீல்” படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்குகிறார்.லக்ஷ்மிமேனன் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கான போடோஷூட் சமீபத்தில் ஏ.வி.ம் ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் பிரபல புகைப்பட கலைஞர்ஜி.வெங்கட்ராமன் அவர்களால் எடுக்கப்பட்டது..

முதல் முறையாக, action hero அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கபோவது நிச்சயம்.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழுநீள கமர்சியல் திரைப்படமாக வரபோகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.