Marudhu Movie Press Meet held at Chennai. Vishal, Sri Divya, Soori, RK Suresh, M.Muthaiah, Velraj, Praveen KL, Aruldoss, G. Marimuthu, Aathira Pandialakshmi graced the event. PRO -Johnson.
குட்டிப்புலி,கொம்பன் ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் ‘மருது’.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாகவிஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா,சூரி,ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக
வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL ஆகியோர் பணியாற்றுகின்றனர், வைரமுத்து,யுகபாரதி ஆகியோரது பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடிகர்
விஷால் பேசுகையில்:
தமிழில் மருது என்ற பெயரிலும் ,ராயுடு என்றபெயரில் தெலுங்கிலும் மே20ம் தேதி வெளியாகிறது. நான் நடித்த சண்டைக்கோழி படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதேபோல இந்த ‘மருது’படம் என்னை நகரம் மட்டுமல்ல,தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை எனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் தந்துள்ளார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ‘அவன் இவன்’படத்திற்குப் பிறகு நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம். ஒரு காமெடியனாக எல்லாருக்கும் நன்கு தெரிந்த சூரி இந்தப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள RK சுரேஷ், வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பானதாக பேசப்படும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தன்னுடைய வேலையினை இந்தப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார். படத்திலேயே வெள்ளையான ஒரு கதாபாத்திரம் நடிகை ஸ்ரீதிவ்யா தான். நான் அவருடன் இணைந்து நடித்திருக்கும் முதல் படம்,அருமையாக நடித்துள்ளார். கதாநாயகன் யாராக இருந்தாலும் இயக்குனர் முத்தையா வின் அடுத்தபடத்தினை கண்டிப்பாக எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும். திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல,எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். மே20 ஆம் தேதி மருது வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன். திருட்டுவிசிடி களைக் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன். திருட்டு விசிடியைத் தடுக்க
அவர் பேசிய பின்னர்,பத்திரிக்கையாளர்களது கேள்விக்குப் பதிலளிக்கையில், தனி ஒரு ஆளாக நீங்கள் மட்டும் முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறீர்கள், அரசாங்கம் கடுமையான சட்டமியற்றி இதனைத் தடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத் தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் முன்வரவேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்
எடிட்டர் பிரவீன் KL பேசும்போது :நடிகர் விஷாலின் உடலமைப்பு,படத்தின் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. சண்டைக்காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். படத்தின் கடைசி 30நிமிடங்கள் நிச்சயமாக நம் மனதில் பதியும் படியாக இருக்கும். நகைச்சுவை நடிகர் சூரி நம்மை கண்கலங்க வைப்பார். ஒரு டெரிஃபிக் கான வில்லனாக RK சுரேஷ் அருமையாக நடித்திருக்கிறார். இந்தப்படம் அனைவருக்கும் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். படத்தின் இயக்குனர் முத்தையா பேசுகையில்; ‘மருது’ மண்மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் ‘மருது’. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத் தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும். ‘மருது’ கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.
படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.நடிகர் சூரி, அவர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர்,எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர்,டான்ஸ் மாஸ்டர் மற்றும் படத்தில் என்னோடு பணியாற்றிய அனைவரும் சிறப்பாக ஒத்துழைத்தார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகை ஸ்ரீதிவ்யா பேசும்போது;
‘மருது’ படம் நடிக்கும் போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான் ‘மெர்சலாயிட்டேன்.’ படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக இது அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply